Posts

Showing posts from December, 2020

கிருப கிருப கிருப|| இன்னும் நான் அழியலஇன்னும் தோற்று போகல ஆனாலும் வாழ்கிறேனே

Image
  இன்னும் நான் அழியல இன்னும் தோற்று போகல ஆனாலும் வாழ்கிறேனே ஏன் ஏன் ஏன் போராட்டங்கள் முடியல பாடுகளும் தீரல ஆனாலும் நிற்கிறேனே ஏன் ஏன் ஏன் } – 2 கிருப கிருப கிருப கிருப – 4 நான் இல்ல என் பெலன் இல்ல என் தாளந்து இல்ல எல்லாம் கிருப } – 2 – கிருப படிக்கல உயரல பட்டதாரி ஆகல ஆனாலும் வாழ்கிறேனே ஏன் ஏன் ஏன் நிற்கிறேன் நிர்மூலம் ஆகாமலே இருக்கிறேன் ஆனாலும் நிற்கிறேனே ஏன் ஏன் ஏன் – கிருப அற்புதங்கள் நடக்குது அதிசயங்கள் நடக்குது வியாதி எல்லாம் மாறினது ஏன் ஏன் ஏன் – 2 பாவமெல்லாம் மறைந்தது சாபமெல்லாம் உடைந்தது பரிசுத்தமாய் மாறினது ஏன் ஏன் ஏன் – கிருப

அரோக்கிய தாயே அம்மா அம்மா உந்தன் அருள் பதம் நாடி வந்தேன் || Arokiya Thaey Amma untham Arul Patham

Image
ஆரோக்கிய தாயே அம்மா அம்மா உந்தன்  அருள் பதம் நாடி வந்தேன்  மயங்கிடும் மனதினில் மரியே என் அன்னையே இறையருள் நிறையச் செய்வாய்  சங்கீதம் பொங்கும் சந்தோஷ வேளையிலே பொங்கும் மனம் தினம் கொண்டாடும் மாதவமே உன்னைத் தான் நம்பி தான் உலகதை உனக்களித்தார் தேவன் வியந்தார் மகிழ்ந்தார்  உன் பெருமை எண்ணித்தான் உள்ளம் முழுதும் நீ தந்தாயே  தேவனுக்கு எண்ணம் போல அருள் தந்தாளும் தாரகையே எண்ணிலா நெஞ்சங்களை இறைவனின் பதம் கொணர்ந்தாய்  இறை நிழலாய் நிறைவாய் என் வாழ்வில் வருவாய்.

அம்மா எங்கள் தாயே உனை பாடாத நாவில்லையே ||Amma Yenkal Thaye Unai Padatha Nal illaye song lyrics

Image
அம்மா எங்கள் தாயே உனை பாடாத நாவில்லையே அருகே நீயும் வரவே - உனை தேடாத நாளில்லையே அந்த மேலோகம் மண்ணிலா தாயாக என்னிலா பூலோகம் வந்த வெண்ணிலா என்னைத் தேடி  ஏழையின் கண்ணீர் இங்கு கரைந்தோடுதே கான மழை நெஞ்சில் பொங்கி வழிந்தோடுதே ஏந்தி வந்த சுமையெல்லாம் கனவானதே சுகராகம் பாட எங்கள் மனம் தேடுதே        மரியே உன்னை அடைந்தோம்        நெஞ்சம் நிறைந்தோம் அன்பிலே கோடான கோடி மக்கள் குறை தீரவே தினந்தோறும் தேடிவரும் தாய் நீயல்லோ கூடி வந்து திருப்பாதம் சரணாவதால் ஆனந்த கானம் இங்கு அலைபாயுதே         மலரே மலரும் நிலவே         உள்ளம் மகிழ்ந்தோம் உன்னிலே

Christmas crib

Image
Home made Christmas crib at kanyakumari