அம்மா எங்கள் தாயே உனை பாடாத நாவில்லையே ||Amma Yenkal Thaye Unai Padatha Nal illaye song lyrics
அம்மா எங்கள் தாயே உனை பாடாத நாவில்லையே
அருகே நீயும் வரவே - உனை
தேடாத நாளில்லையே
அந்த மேலோகம் மண்ணிலா தாயாக என்னிலா
பூலோகம் வந்த வெண்ணிலா என்னைத் தேடி
ஏழையின் கண்ணீர் இங்கு கரைந்தோடுதே
கான மழை நெஞ்சில் பொங்கி வழிந்தோடுதே
ஏந்தி வந்த சுமையெல்லாம் கனவானதே
சுகராகம் பாட எங்கள் மனம் தேடுதே
மரியே உன்னை அடைந்தோம்
நெஞ்சம் நிறைந்தோம் அன்பிலே
கோடான கோடி மக்கள் குறை தீரவே
தினந்தோறும் தேடிவரும் தாய் நீயல்லோ
கூடி வந்து திருப்பாதம் சரணாவதால்
ஆனந்த கானம் இங்கு அலைபாயுதே
மலரே மலரும் நிலவே
உள்ளம் மகிழ்ந்தோம் உன்னிலே
Comments