அரோக்கிய தாயே அம்மா அம்மா உந்தன் அருள் பதம் நாடி வந்தேன் || Arokiya Thaey Amma untham Arul Patham
ஆரோக்கிய தாயே அம்மா அம்மா உந்தன்
அருள் பதம் நாடி வந்தேன்
மயங்கிடும் மனதினில் மரியே என் அன்னையே
இறையருள் நிறையச் செய்வாய்
சங்கீதம் பொங்கும் சந்தோஷ வேளையிலே
பொங்கும் மனம் தினம் கொண்டாடும் மாதவமே
உன்னைத் தான் நம்பி தான் உலகதை உனக்களித்தார்
தேவன் வியந்தார் மகிழ்ந்தார் உன் பெருமை எண்ணித்தான்
உள்ளம் முழுதும் நீ தந்தாயே தேவனுக்கு
எண்ணம் போல அருள் தந்தாளும் தாரகையே
எண்ணிலா நெஞ்சங்களை இறைவனின் பதம் கொணர்ந்தாய்
இறை நிழலாய் நிறைவாய் என் வாழ்வில் வருவாய்.
Comments