அன்பும் நட்பும் எங்குள்ளதோ அங்கே இறைவன் இருக்கின்றார் - Anbum Natpum Yenkullatho Angey Iraivan Irukintar
அன்பும் நட்பும் எங்குள்ளதோ
அங்கே இறைவன் இருக்கின்றார்
1. கிறிஸ்துவின் அன்பு நமையெல்லாம்
ஒன்றாய் கூட்டிச் சேர்த்ததுவே
அவரில் அக்களித்திடுவோம் யாம்
அவரில் மகிழ்ச்சி கொள்வோமே
ஜீவிய தேவனுக் கஞ்சிடுவோம்
அவருக்கன்பு செய்திடுவோம்
நேரிய உள்ளத் துடனே யாம்
ஒருவரை ஒருவர் நேசிப்போம்
2. எனவே ஒன்றாய் நாமெல்லாம்
வந்து கூடும் போதினிலே
மனதில் வேற்றுமை கொள்ளாமல்
விழிப்பாய் இருந்து கொள்வோமே
தீய சச்சரவுகள் ஒழிந்திடுக
பிணக்குகள் எல்லாம் போய் ஒழிக
நமது மத்தியில் நம் இறைவன்
கிறிஸ்து நாதர் இருந்திடுக
3. முக்தி அடைந்தோர் கூட்டத்தில்
நாமும் ஒன்றாய்ச் சேர்ந்து மனம்
மகிழ்ந்து கிறிஸ்து இறைவா நின்
மகிமை வதனம் காண்போமே
முடிவில்லாமல் என்றென்றும்
நித்திய காலம் அனைத்திற்கும்
அளவில்லாத மாண்புடைய
பேரானந்தம் இதுவேயாம்
Comments