புனித சவேரியாரே வாழ்க உம் திருப்பெயரேஎங்கள் நாடு நலம்பெறவே உம் திருவுடல் விட்டுச்சென்றீரே
புனித சவேரியாரே வாழ்க உம் திருப்பெயரே
எங்கள் நாடு நலம்பெறவே உம் திருவுடல் விட்டுச்சென்றீரே (2)
ஏ...ஏ... புனித சவேரியாரே ... லாலா வாழ்வோம் உமைப்போலே
1. பல்கலையில் சிறந்தீர் பாரீசையும் துறந்தீர் பாரத நாட்டுக்கு வந்தீர்
ஒருகையில் சிலுவை மறுகையில் மணியை
ஏந்திச் சொன்னீர் இயேசுவை (2) - ஏ...ஏ... புனித...
2. உலகினில் பிறந்து நாடுகள் ஐந்து பாடுது உலகம் புகழ்ந்து
உந்தன் வாழ்வினை வியந்து வாழ்வோம் துணிந்து
தொடர்வோம் இயேசுவில் இணைந்து (2) - ஏ...ஏ... புனித.
Comments