உலகமெலாம் எனக்காதாயம் எனவாழ்ந்தவர் மகிழ்ந்ததில்லை
உலகமெலாம் எனக்காதாயம் என
வாழ்ந்தவர் மகிழ்ந்ததில்லை
ஆன்மாவே எனக்காதாயம் என வாழ்ந்தால் கவலையில்லை (2)
அழியும் செல்வம் சேர்ப்பதா அழியா ஆன்மாவைக் காப்பதா
இந்தக் கேள்விக்கு பதிலாய் வாழ்ந்தவர் யார்?
அவரே புனித சவேரியார்
1. பொன்னும் பொருளும் தேடுகிறோம்
பட்டம் பதவியும் நாடுகிறோம் (2)
எதுவும் நிறைவு தருவதில்லை
எதிலும் மகிழ்ச்சி நிலைப்பதில்லை
முடிவில்லாதது ஒன்றேதான் அழிவில்லாத ஆன்மாதான் - 2
2. அறிவும் திறனும் அமைவதில்லை
உறவும் நட்பும் தொடர்வதில்லை (2)
தேடும் எதுவும் கிடைப்பதில்லை
கிடைக்கும் பலவும் நிலைப்பதில்லை
முடிவில்லாதது ஒன்றேதான் அழிவில்லாத ஆன்மாதான் - 2
Comments