புனித யூதா ததேயுவை நோக்கி ஜெபம் மற்றும் புகழ்மாலை
✝️🌹மாட்சிமைமிக்க அப்போஸ்தலரும் வேதசாட்சியுமான புனித யூதா ததேயுவே🧎♂️ ✝️🌹எங்கள் ஆண்டவரும் மீட்பருமான இயேசு கிறிஸ்துவின் நெருங்கிய உறவினரே🧎♂️ ✝️🌹புண்ணியங்கள் மின்னித் துலங்கும் தூயவரே🧎♂️ ✝️🌹புதுமை வரங்களில் சிறந்தவரே🧎♂️ ✝️🌹தம்மை தேடி வந்தவர்களை தப்பாமல் ஆதரிக்கும் தயாள உள்ளங் கொண்டவரே🧎♂️ ✝️🌹உம்மை நாங்கள் வாழ்த்துகிறோம்.🧎♂️ ✝️🌹இந்த அற்புத வரங்களை உமக்களித்த அன்பு தேவனுக்கு ஆராதனை செலுத்துகிறோம்🧎♂️ ✝️🌹இதய பூர்வமான நன்றி நவில்கிறோம்.🧎♂️ ✝️🌹எங்களுக்குத் தேவையான ஆன்ம சரீர நலன்களையெல்லாம் அடைந்து தந்தருள உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம்🧎♂️ ✝️🌹சிறப்பாக இப்போது எங்களுக்கு மிகவும் அவசியமாக இந்த வரங்களைப் பெற்றுத்தாரும்.🧎♂️ *(நம் தேவைகளை எடுத்துக் கூறுவோம்)* ✝️🌹நேசிக்கப்படத் தக்கவரும் உள்ளப் பண்பாடு உடையவரும் இறைப் புகழை பாடுபவருமான பெயர் பெற்று இயங்கும் தயாள இருதய புனித யூதா ததேயுவே 🧎♂️ ✝️🌹உமது வல்லமையில் எங்கள் நம்பிக்கை வீண் போக விடாதேயும்.🧎♂️ ✝️🌹யூதாசின் பெயர் ஒற்றுமையால் உமக்கு நேர்ந்த பக்திக் குறையைக் ...