அழைத்தவரே அழைத்தவரே என் ஊழியத்தின் ஆதாரமே | alaiththavarae alaiththavaraeen ooliyaththin aathaaramae

அழைத்தவரே அழைத்தவரே
என் ஊழியத்தின் ஆதாரமே – 2

எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள்
எனை சூழநின்றாலும் உம்மை பார்க்கின்றேன் – 2
உத்தம ஊழியன் என்று நீர் சொல்லிடும்
ஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஒடுகிறேன் – 2

1. வீணான புகழ்ச்சிகள் எனக்கிங்கு வேண்டாமே
பதவிகள் பெருமைகள் ஒரு நாளும் வேண்டாமே – 2
ஊழியப் பாதையில் ஒன்று மட்டும் போதுமே
அப்பா உன் கால்களின் சுவடுகள் போதுமே – 2 – அழைத்தவரே

2. விமர்சன உதடுகள் மனம்சோர வைத்தாலும்
மலைபோன்ற தேவைகள் சபை நடுவில் நின்றாலும்
அழைத்தவர் என்றுமே விலகுவதில்லையே
கிருபையின் வரங்களும் குறைவதும் இல்லையே – 2 – அழைத்தவரே

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு