புனித மிக்கேல் சம்மனசுக்குப் புகழ்மாலை
சுவாமி கிருபையாயிரும் கிறிஸ்துவே கிருபையாயிரும் சுவாமி கிருபையாயிரும் கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும் கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாகக் கேட்டருளும் பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா - எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி உலகத்தை மீட்டு இரட்சித்த சுதானாகிய சர்வேசுரா - எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி தூய ஆவியாகிய சர்வேசுரா - எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி புனித தமத்திருத்துவமாய் இருக்கிற ஏக சர்வேசுரா - எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி புனித மரியாயே .... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் . புனித மிக்கேலே ... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் . சர்வேசுவரனுடைய ஞானத்தால் நிறைந்திருக்கிறவரான புனித மிக்கேலே... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் . தாழ்ச்சியின் கண்ணாடியான புனித மிக்கேலே ... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் . கீழ்படிதலை ஏவுகிறவரான புனித மிக்கேலே ... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் . தேவ குமாரனை உத்தம நெறியில் ஆராதிக்கிறவ...