Posts

விண்ணப்பத்தைக் கேட்பவரே Vinnapathai ketpavare Lyrics Song

விண்ணப்பத்தைக் கேட்பவரே-என் கண்ணீரைக் காண்பவரே சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா உம்மால் கூடும் எல்லாம் கூடும் ஒரு வார்த்தை சொன்னால் போதும் மனதுருகி கரம் நீட்டி  ஆதிசயம் செய்பவரே சித்தம் உண்டு சுத்தமாக  என்று சொல்லி சுகமாக்கினீர் என் நோய்களை சிலுவையிலே சுமந்து தீர்த்தீரைய்யா குருடர்களை பார்க்கச் செய்தீர் முடவர்கள் நடக்கக் செய்தீர் உம் காயத்தால் சுகமானேன் ஒரு கோடி ஸ்தோத்திரம்

என் இறைவா என் இறைவா ஏன் என்னை கைநெகிழ்ந்தீர்||En Iraiva En Iraiva Yen ennai Kai

Image
என் இறைவா என் இறைவா ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர்? (2) என்னைப் பார்ப்போர் எல்லாரும் என்னை ஏளனம் செய்கின்றனர் உதட்டைப் பிதுக்கி தலையை அசைக்கின்றனர் ஆண்டவர் மீது நம்பிக்கை வைத்தானே அவர் மீட்கட்டும் அவருக்கு இவன்மீது பிரியமிருந்தால் இவனை விடுவிக்கட்டும் என்றார்கள் ஏனெனில் பல நாய்கள் என்னைச் சூழ்ந்து கொண்டன பொல்லாதவர்கள் கூட்டம் என்னை வளைத்துக் கொண்டது என் கைகளையும் கால்களையும் துளைத்தார்கள் என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணிவிட முடியும் அவர்களோ என்னைப் பார்க்கிறார்கள் பார்த்து அக்களிக்கிறார்கள் என் ஆடைகளைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்கிறார்கள் என் உடைமீது சீட்டுப் போடுகிறார்கள் ஆனால் நீரோ ஆண்டவரே என்னை விட்டுத் தொலைவில் போய் விடாதேயும் எனக்கு துணையான நீர் எனக்கு உதவி புரிய விரைந்து வாரும்

கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம் கட்டிடுவோம் கிறிஸ்தேசுவுக்காய் ||Kattadam Kattidum Sirpigal

Image
கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம் கட்டிடுவோம் கிறிஸ்தேசுவுக்காய் சுத்தியல் வைத்து அடித்தல்ல ரம்பத்தால் மரத்தை அறுத்தல்ல ஒவ்வொரு நாளும் கட்டிடுவோம் ஒவ்வொரு செயலாம் கற்களாலே உத்தமர் இயேசுவின் அஸ்திபாரம் பத்திரமாக தாங்கிடுவார் கைவேலை அல்லா வீடொன்றை கடவுளின் பூரண சித்தப்படி கட்டிடும் சிறிய சிற்பிகள் நாம் கட்டிடுவோமே நித்தியத்திற்காய் பாவமாம் மணலில் கட்டப்பட்ட பற்பல வீடுகள் வீழ்ந்திடுமே – ஆவலாய் இயேசுவின் வார்த்தைக் கேட்போம் அவரே மூலைக்கல் ஆகிடுவார்

Magilvom Magilvom - மகிழ்வோம் மகிழ்வோம்

மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம் இயேசு இராஜன் நம் சொந்தமாயினார் இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர் எந்தன் உள்ளத்தின் சொந்தமானார் ஆ ஆனந்தமே பரமானந்தமே இது மாபெரும் பாக்கியமே – இந்த 2. சின்னஞ்சிறு வயதில் என்னைக் குறித்து விட்டார் தூரம் போயினும் கண்டுக்கொண்டார் தமது ஜீவனை எனக்கும் அளித்து ஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார் 3. எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்று என்னைப் பிரிக்காது காத்துக்கொள்வார் என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை அவர் வரும் வரைக் காத்துக் கொள்வேன் 4. அவர் வரும் நாளினில் என்னைக் கரம் அசைத்து அன்பாய்க் கூப்பிட்டுச் சேர்த்துக்கொள்வார் அவர் சமூகமதில் அங்கே அவருடனே ஆடிப்பாடியே மகிழ்ந்திடுவேன்

Yaridam Selvom Iraivaa - யாரிடம் செல்வோம் இறைவா

Image
யாரிடம் செல்வோம் இறைவா வாழ்வு தரும் வார்த்தை எல்லாம் உம்மிடம் அன்றோ உள்ளன யாரிடம் செல்வோம் இறைவா இறைவா    (4) அலைமோதும் உலகினிலே ஆறுதல் நீ தர வேண்டும்    (2) அண்டி வந்தோம் அடைக்கலம் நீ  (2) ஆதரித்தே அரவணைப்பாய்    (2) மனதினிலே போராட்டம் மனிதனையே வாட்டுதையா  (2) குணமதிலே மாறாட்டம்  (2) குவலயந்தான் இணைவதெப்போ   (2) வேரறுந்த மரங்களிலே விளைந்திருக்கும் மலர்களைப் போல்   (2) உலகிருக்கும் நிலை கண்டு      (2) உனது மனம் இரங்காதோ       (2)

தேவசாகயம் மவுன்ட் புகைபடங்கள்

Image

அதிசய மின்னல் மாதாவை நோக்கி ஜெபம்

தூய அதிசய மின்னல் மாதாவை நோக்கி ஜெபம்       எங்கள் மீது கொண்ட அளவற்ற அன்பின் காரணமாக தரையிறங்கிய மின்னல் மின்னல் மாதாவே! ஒளி வெள்ளத்தில் மண்ணுக்கு வந்த தங்கத் தாரகையே மனச்சோர்வினால் வாடும் நெஞ்சங்களுக்கு, ஆதரவற்றோர்க்கு அடைக்கல பாதையே! துன்ப துயரங்களிலிருந்து விடுதலை அளிப்பவளே! வறுமையில் வாடும் ஏழைகளின் வாழ்வை வளமாக்கும் தீராத நோயினால் அல்லல்படும் நோயாளிகளை நலமாக்கும் உம்மையே தஞ்சமென்று நாடி வரும் அடியோர்களின் வாழ்வை வளமாக்கும் எங்கள் அனைவருக்காகவும் உம் திருமகன் இயேசுவிடம் பரிந்து பேசி பாதுகாப்பு அளித்தருளும் தாயே! உம்மை வாழ்த்தி வணங்குகின்றோம் எம் உள்ளழரை ஆமேன் !