அதிசய மின்னல் மாதாவை நோக்கி ஜெபம்
தூய அதிசய மின்னல் மாதாவை நோக்கி ஜெபம்
எங்கள் மீது கொண்ட அளவற்ற அன்பின் காரணமாக தரையிறங்கிய மின்னல் மின்னல் மாதாவே! ஒளி வெள்ளத்தில் மண்ணுக்கு வந்த தங்கத் தாரகையே மனச்சோர்வினால் வாடும் நெஞ்சங்களுக்கு, ஆதரவற்றோர்க்கு அடைக்கல பாதையே! துன்ப துயரங்களிலிருந்து விடுதலை அளிப்பவளே! வறுமையில் வாடும் ஏழைகளின் வாழ்வை வளமாக்கும் தீராத நோயினால் அல்லல்படும் நோயாளிகளை நலமாக்கும் உம்மையே தஞ்சமென்று நாடி வரும் அடியோர்களின் வாழ்வை வளமாக்கும் எங்கள் அனைவருக்காகவும் உம் திருமகன் இயேசுவிடம் பரிந்து பேசி பாதுகாப்பு அளித்தருளும் தாயே! உம்மை வாழ்த்தி வணங்குகின்றோம் எம் உள்ளழரை ஆமேன்!
Comments