இறை இரக்கத்தின் நவநாள்
முதல் நாள் 'இன்று மனுக்குலம் முழுவதையும் சிறப்பாக பாவிகள் அனைவரையும் என்னிடம் கூட்டிவந்து, என் இரக்கக் கடலில் முழ்கவை. இதன்மூலம் ஆன்மாக்களின் இழப்பினால் கடுத்துயரத்தில் ஆழ்ந்துள்ள எனக்கு ஆறுதலளிப்பாய்' மனுக்குலம் முழுவதும் வி{சமாகப் பாவிகள் இறைவனின் இரக்கத்தை அடையவேண்டுமென்று ஜெபிப்போமாக. இரக்கம் நிறைந்த இயேசுவே! எங்களுக்கு இரக்கமும் மன்னிப்பும் அளிப்பவரே எமது பாவங்களைப் பாராமல் உமது அளவற்ற நன்மைத்தனத்தில் நாங்கள் கொண்டுள்ள நம்பிக்கையைப் பாரும். கருணை மிகுந்த உமது இதய இல்லத்தில் எங்களை ஏற்றுக் கொள்ளும். எவரும் அதிலிருந்து பிரிந்து போகவிடாதேயும். பரமதிரித்துவத்தில் பிதாவோடும் தூய ஆவியோடும் உம்மைப் பிணைக்கும் அன்பின் பேரால் உம்மை இரந்து மன்றாடுகிறோம். பரலோகத்திலிருக்கற... அருள் நிறைந்த... பிதாவுக்கும்.... நித்திய பிதாவே உமது திருக்குமாரனும் எமதாண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இரக்கம் நிறைந்த இதயத்திலே நம்பிக்கை வைத்துள்ள மனுக்குலத்தின் மீதும் உமது கருணைக் கண்களை திருப்பியருளும். அவரது துயரம் நிறைந்த பாடுகளைப் பார்த்து எங்களுக்கு உமது இரக்கத்தைக் காட்டியருளும். எல்லாம் வல்ல உமது இர...