குழந்தை மாதா செபம்
ஓ இனிய குழந்தை மரியே! இயேசுவின் தாயாகத் தெரிந்து கொள்ளப்பட்ட எங்கள் அன்னையும் அரசியுமானவளே! நீர் எங்களுக்கு அடைந்து தந்துள்ள எண்ணிலா வரங்களில், எங்களது இந்த எளிய மன்றாட்டுகளுக்கு செவிசாய்த்தருளும் உம்மை நம்புகிறோம். எமக்கு ஆதரவாயிருக்கும் தாயே!.
ஓ புனித குழந்தை மாதாவே! இறைவனின் தாயே உமக்கு அளித்துள்ள அநேக நன்கொடைகளால் எம் மீது கருணை கூர்ந்தருளும் அம்மா. நான் கேட்கும் வரங்கள் இறைவனின் விருப்பத்திற்கு ஏற்புயதானால் அவற்றை எனக்கு அடைந்து தந்தருளும் தாயே, உம் இளம் கரங்களை நீட்டி என்னை ஆசீர்வதித்தருளும் தாயே. உமது அருளை நான் என்றென்றைக்கும் போற்றிப்புகழ்வேன் - ஆமேன்
Comments