இறை இரக்கத்தின் ஜெபமாலை
1. இறை இரக்கத்தின் ஜெபமாலை
1. தொடக்க ஜெபம்:
பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே -ஆமென்
இயேசுவே நீர் மரித்தீர். ஆனால் உமது மரணம் ஆன்மாக்களின் ஊற்றாகவும், இரக்கத்தின் கடலாகவும் திறக்கப்பட்டது. ஓ வாழ்வின் ஊற்றே! ஆழம் கான முடியாத இறைவனின் இரக்கமே! அகில உலகையும் அரவணைத்து, உமது இரக்கம் முழுவதையும் எம்மீது பொழிந்தருளும்.
இயேசுவின் திருஇதயத்திலிருந்து எங்களுக்காக இரக்கத்தின் ஊற்றாக வழிந்தோடிய இரத்தமே! தண்ணீரே! உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.
இயேசுவின் திருஇதயத்திலிருந்து எங்களுக்காக இரக்கத்தின் ஊற்றாக வழிந்தோடிய இரத்தமே! தண்ணீரே! உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.
இயேசுவின் திருஇதயத்திலிருந்து எங்களுக்காக இரக்கத்தின் ஊற்றாக வழிந்தோடிய இரத்தமே! தண்ணீரே! உம்மீது நம்பிக்கை வைக்கிறேன் .
இயேசு கற்பித்த செபம்
பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக. உம்முடைய இராட்ச்சியம் வருக. உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல, பூலோகத்திலும் செய்யப்படுவதாக.
எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும். எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல, எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களைச் சோதனையில் விழவிடாதேயும். தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும். -ஆமென்.
புதிய மொழிபெயர்ப்பு:
விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக! எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களை சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.
சமங்கள வார்த்தை செபம்
அருள் நிறைந்த மரியே வாழ்க! கர்த்தர் உம்முடனே. பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.
அர்ச்சிஸ்ட மரியாயே, சர்வேசுரனுடைய மாதாவே பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும். -ஆமென்.
புதிய மொழிபெயர்ப்பு:
அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே.
தூய மரியே இறைவனின் தாயே பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக்கொள்ளும். ஆமென்.
விசுவாச அறிக்கை:
பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன். அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கிறேன். இவர் பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாய் உற்பவித்து கன்னிமரியிடமிருந்து பிறந்தார். போஞ்சுபிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு, மரித்து அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். பரலோகத்திற்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கம் வீற்றிருக்கிறார். அவ்விடத்திலிருந்து சீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க வருவார். பரிசுத்த ஆவியை விசுவசிக்கிறேன். பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன். அர்ச்சியசிஷ்டவர்களுடைய சமூதீதப் பிரயோசனத்தை விசுவசிக்கிறேன். பாவப்பொறுத்தலை விசுவசிக்கிறேன். சரீர உத்தானத்தை விசுவசிக்கிறேன். நித்திய சீவியத்தை விசுவசிக்கிறேன். -ஆமென்.
2. பெரிய மணியில்:
நித்திய பிதாவே! எங்கள் ஆண்டவரும் உமது நேச மகனுமான இயேசுக்கிறிஸ்துவின் உடலையும், இரத்தத்தையும், ஆன்மாவையும், தெய்வீத்தையும் எங்கள் பாவங்களுக்காகவும் அகில உலகின் பாவங்களுக்காகவம், பரிகாரமாக உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம்.
3. சிறிய மணிகளில்(10):
இயேசுவின் வேதனை நிறைந்த பாடுகளின் வழியாக...
எங்கள் மீதும் அகில உலகின்மீதும் இரக்கமாயிரும் பிதாவே ( 10 முறை)
(2, 3ஆம் படிகளை 5முறை சொல்லவும் (5தேவ இரகசியங்களை தியானிப்பதுபோல்))
4. முடிவில்:
புனித இறைவா! புனித எல்லாம் வல்லவரே! புனித நித்தியரே! எங்கள் மீதும் அகில உலகின்மீதும் இரக்கமாயிரும்
புனித இறைவா! புனித எல்லாம் வல்லவரே! புனித நித்தியரே! எங்கள் மீதும் அகில உலகின்மீதும் இரக்கமாயிரும்
புனித இறைவா! புனித எல்லாம் வல்லவரே! புனித நித்தியரே! எங்கள் மீதும் அகில உலகின்மீதும் இரக்கமாயிரும்
இருதி செபம்:
மகா தயை நிறைந்த இறைவா! இரக்கத்தின் தந்தையே! ஆறுதலின் தேவனே! உம்மீது விசுவாசமும் நம்பிக்கையும் கொண்ட ஆன்மாக்கள் மீது இரக்கம் கொண்டீரே. உமது அளவற்ற இரக்கத்தைக் குறித்து எங்கள் பேரில் உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். இத் துன்ப உலகில் எங்களுக்கு நேரிடும் எல்லா சோதனைகளிலும் உமக்குப் பிரமாணிக்கமாயிருக்க உமது இரக்கத்தின் அருள் கொடைகளை எங்கள் மீது நிறைவாகப் பொழிந்தருளும். என்றும் வாழ்பவரும், எல்லாம் வல்லவருமாகிய எங்கள் ஆண்டவர் இயேசுக்கிறிஸ்துவின் திருமுகத்தைப் பார்த்து இவற்றை எங்களுக்குத் தந்தருளும். -ஆமென்.
Comments