ஆணிகள் பாய்ந்த கரங்களை விரித்தே ஆவலாய், Aanigal Paaintha Karankkalai

ஆணிகள் பாய்ந்த
கரங்களை விரித்தே ஆவலாய்
இயேசுன்னை அழைக்கிறாரே

1. பார் திருமேனி வாரடியேற்றவர்
பாரச் சிலுவைதனைச்
சுமந்து சென்றனரே
பாவமும் சாபமும் சுமந்தாரே
உனக்காடய் பயமின்றி வந்திடுவாய்

2. மயக்கிடுமோ இன்னும் மாயையின்
இன்பம் நயத்தாலே
உந்தனை நாசமாக்கிடுமே
உணர்ந்திதையுடனே உன்னதரண்டை
சரண் புகுவாய் இத்தருணம்

3. கிருபையின் வாசல்
அடைத்திடு முன்னே
மரணத்தின் சாயலில்
இணைந்திடுவாயே
உருவாக்கியே புதுசிருஷ்டியில் வளர
கிருபையும் அளித்திடுவார்

4. இயேசுவல்லாது இரட்சிப்புத்
தரவோர் இரட்சகர் வேறு
இகமதிலுண்டோ
அவர் வழி சத்தியம் ஜீவனுமாமே
அவரேயுன் நாயகரே

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு