இந்நாளில் இயேசுநாதர்உயிர்த்தார் கம்பீரமாய், Inaalil IyaechunaatharUyirththaar Kampiiramaay

இந்நாளில் இயேசுநாதர்

உயிர்த்தார் கம்பீரமாய் – இகல்

அலகை சாவும் வென்றதிக வீரமாய்

மகிழ் கொண்டாடுவோம்

மகிழ் கொண்டாடுவோம்


1. போர் சேவர் சமாதி

சூழ்ந்து காவிலிருக்க

புகழார்ந்தெழுந்தனர் தூதன்

வந்து கல்முடி பிரிக்க


2. அதிகாலையில் சீமோனோடு

யோவானும் ஓடிட

அக்கல்லறையினின் றேகினர்

இவர் ஆய்ந்து தேடிட


3. பரிசுத்தனை அழிவுகாண

வொட்டீர் என்று முன்

பகர் வேத சொற்படி

பேதமற்றெழுந்தார் திருச்சுதன்


4. இவ்வண்ணமாய் பரன் செயலை

எண்ணி நாடுவோம் எல்லோருமே

களிகூர்ந்தினிதுடன் சேர்ந்து பாடுவோம்

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு