ஜெபமாலை அம்சங்கள்
செபமாலையில் இரண்டு அம்சங்கள் உள்ளன :
1. வாய்ச் செபம்.
2. அதே வேளையில் நாம் உள்ளத்தில் தியானிக்க வேண்டிய மறை நிகழ்ச்சி என்ற மனச் செபம்.
'மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்து கொண்டிருந்தார்' என்பதை லூக்கா இருமுறை நினைவுப் படுத்துகிறார் (2: 19, 51).
அந்த அன்னையின் இதயங் கொண்டு, அவரது பார்வையில் நம் மீட்பின் மறைநிகழ்ச்சிகளை நாம் தியானிக்கிறோம்.
அந்த மறை நிகழ்ச்சிகள் நம் மீட்புப் பணியின் நான்கு கட்டமாக தியானிக்கலாம்
1. தம்மையே வெறுமையாக்கி மனித உருவில் தோன்றினார் - மகிழ்ச்சி மறைநிகழ்ச்சிகள்.
2. இயேவுவின் பணிவாழ்வு, இறையன்பின் வெளிப்பாடு - ஒளியின் மறை நிகழ்ச்சிகள்.
3. சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்குக் கீழ்படிபவரானார் - துயர மறை நிகழ்ச்சிகள்.
4. கடவுள் அவரை எல்லோருக்கும் மேலாக உயர்த்தினார் - மகிமை மறை நிகழ்ச்சிகள்.
நற்செய்தியின் பொழிவே செபமாலை என்பதால், அனைவரும் பாராட்டிப் பயில வேண்டிய பக்தி முயற்சி இது.
Comments