தூய ஆவியார் செபம்

தூய ஆவியார் செபம்

தூய ஆவியாரே / எழுந்தருளி வாரும். விண்ணகத்திலிருந்து / உமது பேரொளியின் அருள் சுடர் எம் மீது அனுப்பிடுவீர்.

எளியோரின் தந்தையே வந்தருள்வீர் / நன்கொடை வள்ளலே வந்தருள்வீர் / இதய ஒளியே வந்தருள்வீர்.

உன்னத ஆறுதல் ஆனவரே / ஆன்ம இனிய விருந்தினரே / இனிய தன்மைத் தருபவரே / உழைப்பின் களைப்பைத் தீர்ப்பவரே / வெம்மைத் தணிக்கும் குளிர் நிழலே / அழுகையில் ஆறுதல் ஆனவரே / உன்னதப் பேரின்ப ஒளியே / உம்மை நம்புவோருடைய இதயத்தின் ஆழம் நிரப்பிடுவீர்.

உமது அருள் ஆற்றல் இல்லாமல் மனிதரில் எதுவும் இல்லை / நல்லது அவனில் எதுவும் இல்லை / மாசு கொண்டதைக் கழுவிடுவீர்.

வரட்சியுற்றதை நனைத்திடுவீர்.

காயப்பட்டதை ஆற்றிடுவீர்.

வணங்காதிருப்பதை வளைத்திடுவீர்.

குளிரானதை குளிர் போக்கிடுவீர்.

தவறிப் போனதை ஆண்டருள்வீர்.

இறைவா உம்மை நம்பும் அனைவருக்கும் / உமது ஏழு கொடைகளையும் வழங்கிடுவீர்.

புண்ணியப் பலன்களையும் வழங்கிடுவீர் / இறுதியில் மீட்பை அளித்து அளவில்லாத இன்பமும் அருள்வீரே. -ஆமென்.

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு