ஜெபமாலை மறை உண்மைகள்
மகிழ்ச்சி நிறை மறை உண்மைகள்
(திங்கள், சனி)
1. கபிரியேல் தூதர் கன்னிமரியாவுக்கு மங்கள வார்த்தை சொன்னதை தியானித்து, தாழ்ச்சி என்னும் வரத்தைக் கேட்டுச் செபிப்போமாக. 2. கன்னி மரியாள் எலிசபெத்தம்மாளைச் சந்தித்ததைத் தியானித்து, பிறரன்பு என்னும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக.3. இயேசு பிறந்ததைத் தியானித்து, எளிமை என்னும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக.
4. இயேசு கோயிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுத்ததை தியானித்து, இறைவனின் திருவுளத்துக்குப் பணிந்து நடக்கும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக.
5. காணாமற் போன இயேசுவைக் கண்டடைந்ததை தியானித்து, நாம் அவரை எந்நாளும் தேடும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக.
துயர் மறை உண்மைகள்
(செவ்வாய், வெள்ளி)
1. இயேசு பூங்காவனத்தில் இரத்த வியர்வை சிந்தியதைத் தியானித்து, நம் பாவங்களுக்காக மனத்துயர் அடைய செபிப்போம்!
2. இயேசு கற்றூணில் கட்டுண்டு அடிக்கப்பட்ட தியானித்து உடலின் புலன்களை அடக்கி வாழும் வரத்தைக் கேட்டு செபிப்போம்!
3. இயேசு முள்முடி தரிக்கப்பட்டதை தியானித்து நிந்தை அவமானங்கள், தாழ்ச்சி இவற்றை திடமனத்துடன் ஏற்கும் வரத்தைக் கேட்டு செபிப்போம்!
4. இயேசு சிலுவை சுமந்ததை தியானித்து வாழ்வின் சிலுவைகளை இயேசுவோடு சேர்ந்து சுமக்கும்வரத்தைக் கேட்டு செபிப்போம்!
5. இயேசு சிலுவையில் உயிர்விட்டதை தியானித்து, இயேசுவை அன்பு செய்யவும், பிறரை மன்னிக்கவும் வரம் கேட்போமாக!
மகிமை நிறை மறை உண்மைகள்
(புதன், ஞாயிறு)
1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து, உயிருள்ள விசுவாசத்துடன் வாழ செபிப்போமாக!
2. இயேசுவின் விண்ணேற்றத்தைத் தியானித்து, நம்பிக்கையுடன் விண்ணக வாழ்வைத் தேடும் வரம் கேட்போமாக!
3. தூய ஆவியாரின் வருகையைத் தியானித்து, நாம் அனைவரும் ஆவியாரின் ஒளியையும் அன்பையும் பெற செபிப்போமாக!
4. இறையன்னையின் விண்ணேற்பைத் தியானித்து, நாமும் விண்ணக மகிமையில் பங்குபெற செபிப்போமாக !
5. இறையன்னை விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப் பெற்றதைத் தியானித்து, நம் அன்னையின் மீது ஆழ்ந்த பக்தி கொள்ள செபிப்போமாக !
ஒளி நிறை மறை உண்மைகள்
(வியாழக் கிழமை)
1. இயேசு யோர்தான் ஆற்றில் திருமுழுக்கு பெற்றதை தியானிப்போமாக !
2. கானாவூர் திருமணத்தில் இயேசு தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றியதை தியானிப்போமாக !
3. இயேசு விண்ணரசைப் பறைசாற்றியதை தியானிப்போமாக !
4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் பெற்றதை தியானிப்போமாக !
5. இயேசு கடைசி இரா விருந்துண்டதையும் நற்கருணை ஏற்படுத்தியதையும் தியானிப்போமாக !
நன்றி..
Comments