உன்னதங்களிலே இறைவனுக்கே மாட்சிமை உண்டாகுக || Unnathangalile iraivanuku maatchimai

உன்னதங்களிலே இறைவனுக்கே
மாட்சிமை உண்டாகுக 
உலகினிலே நல்மனத்தவர்க்கு 
அமைதியும் உண்டாகுக

புகழ்கின்றோம் யாம் உம்மையே
வாழ்த்துகின்றோம் இறைவனே
உமக்கு ஆராதனை புரிந்து உம்மை
மகிமைப்படுத்துகின்றோம் யாம்

உமது மேலாம் மாட்சிமைக்காக
உமக்கு நன்றி நவில்கின்றோம்
ஆண்டவராம் எம் இறைவனே
இணையில்லாத விண்ணரசே

ஆற்றல் அனைத்தும் கொண்டு இலங்கும்
தேவ தந்தை இறைவனே
ஏகமகனாக ஜெனித்த ஆண்டவர்
இயேசு கிறிஸ்து இறைவனே

ஆண்டவராம் எம் இறைவனே
இறைவனின் திருச் செம்மறியே
தந்தையினின்று நித்தியமாக
ஜெனித்த இறைவன் மகனே நீர்

உலகின் பாவம் போக்குபவரே
நீர் எம்மீது இரங்குவீர்
உலகின் பாவம் போக்குபவரே
எம்மன்றாட்டை ஏற்றருள்வீர்

தந்தையின் வலத்தில் வீற்றிருப்பவரே
நீர் எம்மீது இரங்குவீர்
ஏனெனில் இயேசு கிறிஸ்துவே
நீர் ஒருவரே தூயவர்

நீர் ஒருவரே ஆண்டவர்
நீர் ஒருவரே உன்னதர்
பரிசுத்த ஆவியுடன் தந்தை இறைவனின் 
மாட்சியில் உள்ளவர் நீரே - ஆமேன்.
 

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு