தூயாதி தூயவரே உமது புகழை, நான் பாடுவேன் - Thooyaadhi thooyavarae – umadhuPugazhai, naan paaduvaen

தூயாதி தூயவரே உமது புகழை, நான் பாடுவேன்
பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்
உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும் – தூயாதி

1. சீடரின் கால்களைக் கழுவினவர்
செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே – தூயாதி

2. பாரோரின் நோய்களை நீக்கினவர்
பாவி என் பாவ நோய் நீக்கினீரே – தூயாதி

3. துயரங்கள் பாரினில் அடைந்தவரே
துன்பங்கள் தாங்கிட பெலன் தாருமே – தூயாதி

4. பரலோகில் இடமுண்டு என்றவரே
பரிவாக எனைச் சேர்க்க வேகம் வாருமே – தூயாதி

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு