ஆண்டவர்க் குகந்த புனிதரிதோமாந்தர் அனைவரின் புகழ்பெற்றார் - Andavarikugantha Pudgarithomanthar Annaivarin puzgalpeeta
ஆண்டவர்க் குகந்த புனிதரிதோ
மாந்தர் அனைவரின் புகழ்பெற்றார்
ஈடிணையில்லா வந்தனையும்
இன்றே பெறவும் தகுதி பெற்றார்
1. புனிதம் தகைமை தாழ்ச்சியுடன்
பொற்புரு கற்புக் கணிகலனாய்
உடலில் உயிரும் உள்ளவரை
உன்னத வாழ்வும் வாழ்ந்தாரே
2. அவரது புனித வாழ்க்கையினால்
ஆயிரம் பேர்கள் ஆங்காங்கே
அவல நோய்கள் கொண்டவர்கள்
அற்புதமாகவே குணம் பெற்றார்
3. ஆகவே நாமும் சபையாக
அவரது புகழ்தனைப் பாடுவதால்
உற்ற அவரது வேண்டுதலால்
உதவிகள் பெற்று மகிழ்வோமே
4. விண்ணக அரியணை மேலமர்ந்து
மின்னிடும் ஒளியில் வீற்றிருந்து
மூவுலகெல்லாம் ஆண்டு வரும்
மூவொரு இறைவன் வாழியவே - ஆமென்
Comments