என்னைக் காண்பவரேதினம் காப்பவரே||Ennai KaanbavaraeThinam Kaappavare
என்னைக் காண்பவரே
தினம் காப்பவரே
ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர்
சுற்றிச் சுற்றி சூழ்ந்திருக்கின்றீர்
நான் அமர்வதும் நான் எழுவதும்
நன்றாய் நீர் அறிந்திருக்கின்றீர்
எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம்
எல்லாமே அறிந்திருக்கின்றீர்
நடந்தாலும் படுத்தாலும்
அப்பா நீர் அறிந்திருக்கின்றீர்
நன்றி ராஜா இயேசு ராஜா
முன்னும் பின்னும் நெருக்கி நெருக்கிச்
சுற்றி என்னை சூழ்ந்திருக்கின்றீர்
உம் திருக்கரத்தால் தினமும் என்னைப்
பற்றி பிடித்திருக்கின்றீர்
கருவை உம் கண்கள் கண்டன
மறைவாய் வளர்வதைக் கவனித்தீரே
அதிசயமாய் பிரமிக்கத்தக்கப்
பக்குவமாய் உருவாக்கினீர்
Comments