இயேசுவே வாழ்வென்று கற்றுக்கொண்டேன் அவரால் அத்தனையும் பெற்றுக்கொண்டேன் | Yesuvae Vazhventu kattrukonden – Yesuvae vaalventu kattukkonntaen

இயேசுவே வாழ்வென்று கற்றுக்கொண்டேன்
அவரால் அத்தனையும் பெற்றுக்கொண்டேன் – (2)
என் ஜெபமெல்லாம் வீணாகப் போகல
என் விசுவாசும் என்றுமே தோற்கல – (2)

நான் ஜெபிக்கும் நேரம் அக்கினியாய் மாறும்
தடையெல்லாம் விடையாக மாறிப்போகும்
அபிஷேகமெல்லாம் நதியாகப் பாயும்
பரலோகம் எனக்காக வேலை செயும் – (2)

1. உம்முன் நிற்கும் ஒவ்வொரு நொடியும்
என்னைப் பெலவானாய்க் காண்கிறேன் – (2)
என் நெரத்தை முதலீடு செகிறேன்
மகிமையை அறுவடை செய்கிறேன் – (2) – நான் ஜெபிக்கும்

2. துதியும் ஜெபமும் பெருகப் பெருக
எங்கள் சபையும் பெருகுதே – (2)
தேசத்தின் கட்டுகள் மாறுதே
அபிஷேம் நுகங்களை முறிக்குதே (என்) – (2) – நான் ஜெபிக்கும்

3. அந்நிய பாஷை பேசப் பேச
ஆவியும் அனலாய் மாறுதே – (2)
நான்சொல்ல பரலோகில் கட்டுமே
நான் சொல்ல பரலோகில் அவிழுமே – (2) – நான் ஜெபிக்கும்

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு