Posts

இறை இரக்கத்தின் நவநாள்

முதல் நாள் 'இன்று மனுக்குலம் முழுவதையும் சிறப்பாக பாவிகள் அனைவரையும் என்னிடம் கூட்டிவந்து, என் இரக்கக் கடலில் முழ்கவை. இதன்மூலம் ஆன்மாக்களின் இழப்பினால் கடுத்துயரத்தில் ஆழ்ந்துள்ள எனக்கு ஆறுதலளிப்பாய்' மனுக்குலம் முழுவதும் வி{சமாகப் பாவிகள் இறைவனின் இரக்கத்தை அடையவேண்டுமென்று ஜெபிப்போமாக. இரக்கம் நிறைந்த இயேசுவே! எங்களுக்கு இரக்கமும் மன்னிப்பும் அளிப்பவரே எமது பாவங்களைப் பாராமல் உமது அளவற்ற நன்மைத்தனத்தில் நாங்கள் கொண்டுள்ள நம்பிக்கையைப் பாரும். கருணை மிகுந்த உமது இதய இல்லத்தில் எங்களை ஏற்றுக் கொள்ளும். எவரும் அதிலிருந்து பிரிந்து போகவிடாதேயும். பரமதிரித்துவத்தில் பிதாவோடும் தூய ஆவியோடும் உம்மைப் பிணைக்கும் அன்பின் பேரால் உம்மை இரந்து மன்றாடுகிறோம். பரலோகத்திலிருக்கற... அருள் நிறைந்த... பிதாவுக்கும்.... நித்திய பிதாவே உமது திருக்குமாரனும் எமதாண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இரக்கம் நிறைந்த இதயத்திலே நம்பிக்கை வைத்துள்ள மனுக்குலத்தின் மீதும் உமது கருணைக் கண்களை திருப்பியருளும். அவரது துயரம் நிறைந்த பாடுகளைப் பார்த்து எங்களுக்கு உமது இரக்கத்தைக் காட்டியருளும். எல்லாம் வல்ல உமது இர...

இறை இரக்கத்தின் ஜெபமாலை

1 . இறை இரக்கத்தின் ஜெபமாலை 1 . தொடக்க ஜெபம்: பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே -ஆமென் இயேசுவே நீர் மரித்தீர். ஆனால் உமது மரணம் ஆன்மாக்களின் ஊற்றாகவும், இரக்கத்தின் கடலாகவும் திறக்கப்பட்டது. ஓ வாழ்வின் ஊற்றே! ஆழம் கான முடியாத இறைவனின் இரக்கமே! அகில உலகையும் அரவணைத்து, உமது இரக்கம் முழுவதையும் எம்மீது பொழிந்தருளும். இயேசுவின் திருஇதயத்திலிருந்து எங்களுக்காக இரக்கத்தின் ஊற்றாக வழிந்தோடிய இரத்தமே! தண்ணீரே! உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.  இயேசுவின் திருஇதயத்திலிருந்து எங்களுக்காக இரக்கத்தின் ஊற்றாக வழிந்தோடிய இரத்தமே! தண்ணீரே! உம்மீது நம்பிக்கை வைக்கிறேன். இயேசுவின் திருஇதயத்திலிருந்து எங்களுக்காக இரக்கத்தின் ஊற்றாக வழிந்தோடிய இரத்தமே! தண்ணீரே! உம்மீது நம்பிக்கை வைக்கிறேன் . இயேசு கற்பித்த செபம் பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக. உம்முடைய இராட்ச்சியம் வருக. உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல, பூலோகத்திலும் செய்யப்படுவதாக. எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும். எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல, எங்கள் பாவங்...

அடியேன் உம் சந்நிதி வருகின்றேன்

அடியேன் உம் சந்நிதி வருகின்றேன் ஆண்டவனே உம் புகழ்பாட நீலவான் அழகே விண்மீனே வாருங்கள் ஆண்டவன் புகழ்பாட நதியும் குன்றும் நலமாக வாருங்கள் ஆண்டவன் புகழ்பாட இறைபுகழ் பாடும் தூதர்களே வாருங்கள் ஆண்டவன் புகழ்பாட மறைபுகழ் கூறும் மாந்தர்களே வாருங்கள் ஆண்டவன் புகழ்பாட

சொந்தம் என்று சொல்லி கொள்ள உம்மை விட யாரும் இல்ல

Image
சொந்தம் என்று சொல்லிக் கொள்ள உம்மை விட யாரும் இல்ல சொத்து என்று அள்ளிக் கொள்ள உம்மை விட ஏதும் இல்ல இயேசுவே இயேசுவே எல்லாம் இயேசுவே 1. உம் தழும்புகளால் நான் சுகமானேன் உம் வார்த்தையினால் நான் பெலனானேன் நான் பெலனானேன், நான் பெலனானேன் 2. உம் கிருபையினால் நான் பிழைத்துக் கொண்டேன் உம் பாசத்தினால் நான் திகைத்துப் போனேன் நான் திகைத்துப் போனேன், நான் திகைத்துப் போனேன் 3. உம் ஆவியினால் நான் பிறந்து விட்டேன் உம் ஊழியத்துக்காய் நான் உயிர் வாழ்வேன் நான் உயிர் வாழ்வேன், நான் உயிர் வாழ்வேன் Sothu Endru Alli Kolla Ummai Vida Yethum Illa Yesuvey Yesuvey Ellam Yesuvey (2) Um Thalumbugalal Naan Sugamaanen Um Vaarthaiyinaal Naan Belanaanen – Sontham Um Kiraubayinaal Naan Pizhaithu Konden Um Paasathinaal Naan Thigaithu Ponen – Sontham Um Aaviyaanal Naan Piranthu Vitten Um Ooliyathirkkai Naan Uyir Vazhven – Sontham

எங்கெங்கோ தேடி தேடி தேடி அலைந்தேன் தேவை நீ தேவா

Image
எங்கெங்கோ தேடி தேடி தேடி அலைந்தேன் தேவை நீ தேவா என்றென்றும் பாடி பாடி உன்னை அழைத்தேன் பாதை நீ நாதா கார்கால மேகம் கண்டும் கனலானேன் நானே நாதா இதயம் திறந்து உதயம் காண உனதருள் தாரும் இறைவா ---- எங்கெங்கோ என் மனம் சோர்ந்து போகும் வேளை   உன்னை கூவி அழைப்பேன் இறைவா இறைவா இறைவா இறைவா இறைவா தாய் மடி சேரும் செய் போல ஓடி வருவேன் எனை அன்பு செய்யும் நல்ல தைவம் நீ தான் எனை என்றும் காக்கும் வல்ல தைவம் நீ தான் நான் வாழும் நாளில் வணங்கும் தைவம் நீ தான் நான் காணும் பொருளில் கவிதை வடிவம் நீ தான் நான் தேடும் இடங்களில் தைவ தரிசனம் நீ தான்                                            ----  எங்கெங்கோ என் நிலை பாதை மாறும் வேளையில் வாசல் தேடி வருவேன் இறைவா இறைவா இறைவா இறைவா இறைவா   தாஹம் கொண்ட மான் போல ஓடி வருவேன் என் வழி துணையாய் ஆன தைவம் நீ தான் எனை என்றும் தேற்றும் நல்ல தைவம் ந...

வந்தோம் உன் மைந்தர் | Vanthom Un Mainthar Koodi

வந்தோம் உன் மைந்தர் கூடி – ஓ  மாசில்லாத் தாயே  சந்தோஷ மாகப் பாடி – உன்  தாள் பணியவே ! பூலோகந் தோன்று முன்னே – ஓ  பூரணத் தாயே !  மேலோனின் உள்ளந் தன்னில் – நீ  வீற்றிருந்தாயே ! தூயோர்களாம் எல்லோரும் – நீ  தோன்றும் நாளினை  ஓயாமல் நோக்கிப பார்த்தே – தம்  முள் மகிழ்ந்தாரே ! நாவுள்ள பேரெல் லோரும் – உன்  நாமம் போற்றுவார்  பாவுள்ள பேர்களோ உன் – மேற்  பாட்டிசைப்பரே!

மாதாவே துணை நீரே | Mathave Thunai Neerae

மாதாவே ! துணை நீரே உம்மை  வாழ்த்திப் போற்ற வரந்தாரும்  ஈதோ பிள்ளைகள் வந்தோம் அம்மா !  ஏற்றன்பாக எமைப் பாரும். வானோர் தம் அரசே ! தாயே எம்  மன்றாட்டைத் தயவாய் கேளும்  ஈனோர் என்றெமை நீர் தள்ளாமல்  எக் காலத்துமே தற் காரும். ஒன்றே கேட்டிடு வோம் தாயே நாம்  ஓர் சாவான பவந்தானும்  என்றேனுஞ் செய்திடாமற் காத்து  எம்மைச் சுத்தர்களாய்ப் பேணும்

இயேசு கற்பித்த செபம்

Image
விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே,  பெயர் தூயது என போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகிலும் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக!  எங்கள் அன்றாட உணவை எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராக்த் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களை சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும் -ஆமேன்

குழந்தை மாதா செபம்

Image
ஓ இனிய குழந்தை மரியே! இயேசுவின் தாயாகத் தெரிந்து கொள்ளப்பட்ட எங்கள் அன்னையும் அரசியுமானவளே! நீர் எங்களுக்கு அடைந்து தந்துள்ள எண்ணிலா வரங்களில், எங்களது இந்த எளிய மன்றாட்டுகளுக்கு செவிசாய்த்தருளும் உம்மை நம்புகிறோம். எமக்கு ஆதரவாயிருக்கும் தாயே!.  ஓ புனித குழந்தை மாதாவே! இறைவனின் தாயே உமக்கு அளித்துள்ள அநேக நன்கொடைகளால் எம் மீது கருணை கூர்ந்தருளும் அம்மா. நான் கேட்கும் வரங்கள் இறைவனின் விருப்பத்திற்கு ஏற்புயதானால் அவற்றை எனக்கு அடைந்து தந்தருளும் தாயே, உம் இளம் கரங்களை நீட்டி என்னை ஆசீர்வதித்தருளும் தாயே. உமது அருளை நான் என்றென்றைக்கும் போற்றிப்புகழ்வேன் - ஆமேன்