Posts

Praying with others across the world

Image
Lord, you said that when two or three would gather together in your name, then you would be present with them. I am praying by myself but I am uniting myself with many individual Christians throughout the world who, though separate, are gathered together in another sense to pray to you, and I trust that you are with me now.

The Angelus

The Angelus The angel of the Lord declared unto Mary And she conceived by the Holy Spirit. Hail Mary, full of grace, the Lord is with thee. Blessed art thou among women, and blessed is the fruit of they womb, Jesus. Holy Mary, Mother of God, pray for us sinners, now and at the hour of our death. Amen. Behold the handmaid of the Lord. Be it done to me according to your word. Hail Mary.... And the Word was made flesh And dwelt among us. Hail Mary.... Pray for us, O holy Mother of God That we may be made worthy of the promises of Christ. Let us pray: Pour forth, we beseech thee, O Lord, thy grace into our hearts, that we, to whom the incarnation of Christ, thy Son, was made known by the message of an angel may, by his passion and cross, be brought to the glory of his resurrection, through the same Christ our Lord. Amen.

மாதா அன்னைக்கு ஐந்நூறு துதிகள்

Image
மாதாவுக்கு ஐந்நூறு துதிகள் 1.பரிசுத்த மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 2 அன்பின் சுடரான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 3 பரலோக மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 4 நீதியுள்ள தேவதையான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 5 சர்வ வல்லமையுள்ள மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 6 உன்னதமான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 7 என்னைப் பாதுகாக்கும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ​ 8 மன்னிக்கும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 9 இ​ரக்கமுள்ள மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 10 சமாதானத்தின் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 11 மீட்பளிக்கும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 12 வானத்துக்கும் பூமிக்கும் அன்னையான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 13 வெற்றியைக் கொடுக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 14 நல்ல ஆலோசனையின் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 15 நல்ல ஆலோசனையின் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 16 அற்புதங்களின் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 17 வல்லமையுள்ள மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 18 வலக்கர...

என் கிருபை உனக்குப் போதும் பலவீனத்தில் என் பெலமோ|En Kirupai Unakkup Pothum Palaveenaththil En Pelamo Pooranamaay Vilangum Lyrics

Image
என் கிருபை உனக்குப் போதும் பலவீனத்தில் என் பெலமோ பூரணமாய் விளங்கும் 1. பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன் எனக்கே நீ சொந்தம் பெயரிட்டு நான் உன்னை அழைத்தேன் எனக்கே நீ சொந்தம் 2. உலகத்திலே துயரம் உண்டு திடன்கொள் என் மகனே கல்வாரி சிலுவையினால் உலகத்தை நான் ஜெயித்தேன் 3. உனக்கெதிரான ஆயுதங்கள் வாய்க்காதே போகும் இருக்கின்ற பெலத்தோடு தொடர்ந்து போராடு 4. எல்லா வகையிலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கி நீ போவதில்லை கலங்கினாலும் மனம் முறிவதில்லை கைவிடப்படுவதில்லை

சுலபமான பத்து , கடினமான பத்து

Image
சுலபமான பத்து!.... 1 . மற்றவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டுவது சுலபம் 2. நினைத்ததையெல்லாம் பேசுவது சுலபம் 3. நம்மை நேசிப்பவர்களைக் காயப்படுத்துவது சுலபம் 4. வெற்றியில் மகிழ்வது சுலபம் 5. வாழ்கையைக் கொண்டாடுவது சுலபம் 6. உறுதிமொழி தருவது சுலபம் 7.பிறரை விமர்சிப்பது சுலபம் 8. தவறுகள் செய்வது சுலபம்  9. பிறர்மீது பழிபோடுவது சுலபம் 10 பிறரிடம் இருந்து பெறுவது சுலபம் கடினமான பத்து!..  1. நம்முடைய தவறுகளை அறிந்து கொள்வது கடினம் 2. நாவைக் கட்டுப்படுத்துவது கடினம் 3. நம்மை நேசிப்பவர்களின் காயத்தை ஆற்றுவது கடினம் 4.  தோல்வியை ஒப்புக்கொள்வது கடினம் 5. அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வது கடினம் 6. உறுதிமொழியைக் காப்பாற்றுவது கடினம் 7. நம்மைத் திருத்திக் கொள்வது கடினம் 8. தவறுகளிலிருந்து பாடம் கற்பது கடினம் 9. நம்மை விமர்சிப்பதை ஏற்பது கடினம் 10. பிறருக்குத் தருவது கடினம்  கடினமானவை எல்லாம் சுலபமானால் வாழ்வில் ஜெயிப்பது மிகமிகச் சுலபம்..

புனித தேவசகாயம் பிள்ளையின் இறுதி ஜெபம்

Image
இயேசுவே என்னைக் கைவிடாதேயும், இயேசுவே என்னை முழுவதும் உமக்கு அர்ப்பணிக்கின்றேன். அன்னை மரியே எனக்கு அருள்புரியும். - ஆமென் 

பனிமய மாதா ஜெபம்

Image
மிகவும் இரக்கமுள்ள தாயே! தூய கன்னி மரியே! இதோ.. உம்முடைய அடைக்கலமாக ஓடிவந்து சரணடைந்து உமது அருட்காவலை மன்றாடிய ஒருவரையும் நீர் கைவிட்டதாக உலகில் ஒருபோதும் சொல்லக்  கேள்விப்பட்டதில்லை என்பதை நினைத்தருளும் கன்னியருடைய அரசியான கன்னிகையே தயயுள்ள தாயே! இப்படிப்பட்ட நம்பிக்கையால் நான் தூண்டபெற்று அடியேன் உம் திருப்பாதம் அண்டி வருகிறேன். பாவியாகிய நான் உம் திருமுன் துயர த்தோடு உமது இரக்கத்திற்காக காத்து நிற்கிறேன். மனுவுருவான திருமகனின் தாயே! எம் மன்றாட்டைப் புறக்கணியாமல் எனக்காக தயவாய் வேண்டிக்கொள்ளும்  -ஆமென்

தூய அந்தோணியாரை நோக்கி பொது மன்றாட்டு

Image
தூய அந்தோணியாரை நோக்கிபொது மன்றாட்டு:-                              எங்கள் பாதுகாவலரான தூய அந்தோணியாரே, இறைவனின் அன்புள்ள அடியாரே கிறிஸ்து பாலகனை கையில் ஏதும் பேறுபெற்ற தூயவரே, திருமறையை ஆர்வமுடன் போதித்த சிறந்த போதகரே தப்பறைகளை தகர்த்தெறிந்த வித்தகரே, இறைவனின் தனி அருளால் அலகையை ஓட்டுபவரே, துன்புறுவோரின் துயர் துடைப்பவரே, பாவியராகிய நாங்கள் உமது உதவியை நாடி உம்மிடம் ஓடி வந்தோம்.  புதுமை வரம் பெற்றிருக்கும் எம் ஞானத்தந்தையே! நம்பிக்கையுடன் உம்மிடம் ஓடி வந்துள்ள உம் பிள்ளைகளின் மன்றாட்டுக்களை கேட்டருளும். உமது ஆதரவை நாடி வந்துள்ள உம் அடியார் எம்மீது உம் கருணைக் கண்களைத் திருப்பியருளும். துன்பம், பிணி, வறுமை, சிறுமை ஆகியவற்றால் வாடி வந்திருக்கும் எங்களுக்கு உதவியருளும். அழுவோரின் கண்ணீரைத் துடைத்தருளும். நோயாளிகளுக்கு உடல் நலம் கொடுத்தருளும்.  எங்கள் அன்புக்குரிய தூய அந்தோணியாரே! இறைவனின் திருவுளப்படி எப்பொழுதும் நீர் நடந்தது போல நாங்களும் இன்பத்திலும் துன்பத்திலும் எப்பொழுதும் அவரது திருவுளத்...

ஜெபம்|Tamil Prayer

Image
ஆண்டவரே இயேசுவே! படைகளின் கடவுளாகிய ஆண்டவரே! உம்மைத் துதிக்கின்றேன். இஸ்ராயேலரை ஆயர் என ஆள்பவரே! உம்மைப் புகழ்கின்றேன். உமது ஆற்றலால் என்னை உம்மில் தூண்டி எழுப்பும் தயவிற்காக நன்றி கூறுகின்றேன். ஆண்டவர் அவரைப் பார்த்து, "மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய் ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள். அது அவளிடமிருந்து எடுக்கப்படாது" என்று உமது ஆட்சியை நான் தேடி அடைய வேண்டும் என்பதையும், அதையே வலிமையாகப் பறறிக் கொள்ள வேண்டும் என்பதையும் இன்றைய இறை வார்த்தையில் வாசிக்கினறேன். இரட்சகரே! வாழ்வு தரும் தூய ஆவியே! இந்த பாவ உலக இச்சை நிறைந்த ஊனியல்பின் செயல்களை விட்டு வலிமையான உமது வார்த்தையில் நிலைத்திருக்க எனக்குக் கிருபை தாரும். இயேசுவே ஆண்டவரே! நான் பலவீன பாவி. உமது அன்புக்கு, உமது பரிசுத்த அரவணப்புக்குத் தகுதி இல்லாதவனாய் பல இச்சையான செயல்களால் என் மனதையும், உடலையும் அலங்கரித்து, உலக மோகத்தில் இருக்கும் என்னைக் கழுவி தூய்மையாக்கி உம்மில் வாழ வளர அருள் தாரும். இன்றைய நாளில் தூய ஆவியானவர் என்னை வழிநத்துவாராக! என்...

காலை ஜெபம்|Tamil Prayer

Image
ஆண்டவரே இயேசுவே, விண்ணையும், மண்ணையும் அனைத்தையும் படைத்த இஸ்ராயேலின் கடவுளின் பரிசுத்த நாமம் போற்றப்படுவதாக; எனெனில் "அவரே எனக்கு அமைதி தந்தார்; தான் அடைந்த துன்பத்தால் எனக்கு வாழ்வு தந்தார்; எனவே நான் நன்றி கூறுகின்றேன். உமது திருகாயங்களால் நான் குணமடைந்தேன் என்றும்ஒ, என் ஆயரும் கண்காணிப்பாளருமான உம்மிடம் திரும்பி வந்திருக்கின்றேன்" என்றும், இன்றைய இறை வார்த்தையின் ஊடாக என்னை உம்மில் வாழ அழைப்பதற்காக நன்றி கூறுகின்றேன். என் ஆயனே! இந்த மாயை நிறைந்த பாவ உலகில் விழுந்து போகாமல் என்னை செம்மையான பாதையில் வழிநாடத்தும். பாவத்தில் விழச்செய்யும் பகைமையிடம் இருந்து என்னைப் பாதுகாரும். உமது பேரன்பிற்குள் வைத்துப் பாதுகாரும். பாவிகளுக்கு உமது வழிகளைக் கற்பிப்பவரே! இந்த மகா பாவியான எனக்கு உமது ஒளியின் வழிகளைக் கற்பித்தருளும்‌. ஆண்டவரே இயேசவே! நீர் துன்பப்பட்ட போதும் பாவங்கள் செய்யவில்லை; பழிச்சொற்கள் சொல்லவில்லை; நான் கடக்கும் இந்த வாழ்வை விட பல சவால்களோடு நீர் கடந்தீர்; உமது பாதச் சுவட்டைப் பின்பற்றி உமக்கு உரியவனாக வாழ வல்லமை தந்து வழி நடத்தும். இன்றைய நாளில் என்னைக் கரம்ப...