காலை ஜெபம்|Tamil Prayer
ஆண்டவரே இயேசுவே, விண்ணையும், மண்ணையும் அனைத்தையும் படைத்த இஸ்ராயேலின் கடவுளின் பரிசுத்த நாமம் போற்றப்படுவதாக; எனெனில் "அவரே எனக்கு அமைதி தந்தார்; தான் அடைந்த துன்பத்தால் எனக்கு வாழ்வு தந்தார்; எனவே நான் நன்றி கூறுகின்றேன். உமது திருகாயங்களால் நான் குணமடைந்தேன் என்றும்ஒ, என் ஆயரும் கண்காணிப்பாளருமான உம்மிடம் திரும்பி வந்திருக்கின்றேன்" என்றும், இன்றைய இறை வார்த்தையின் ஊடாக என்னை உம்மில் வாழ அழைப்பதற்காக நன்றி கூறுகின்றேன். என் ஆயனே! இந்த மாயை நிறைந்த பாவ உலகில் விழுந்து போகாமல் என்னை செம்மையான பாதையில் வழிநாடத்தும். பாவத்தில் விழச்செய்யும் பகைமையிடம் இருந்து என்னைப் பாதுகாரும். உமது பேரன்பிற்குள் வைத்துப் பாதுகாரும். பாவிகளுக்கு உமது வழிகளைக் கற்பிப்பவரே! இந்த மகா பாவியான எனக்கு உமது ஒளியின் வழிகளைக் கற்பித்தருளும். ஆண்டவரே இயேசவே! நீர் துன்பப்பட்ட போதும் பாவங்கள் செய்யவில்லை; பழிச்சொற்கள் சொல்லவில்லை; நான் கடக்கும் இந்த வாழ்வை விட பல சவால்களோடு நீர் கடந்தீர்; உமது பாதச் சுவட்டைப் பின்பற்றி உமக்கு உரியவனாக வாழ வல்லமை தந்து வழி நடத்தும். இன்றைய நாளில் என்னைக் கரம்பிடித்து பசுமையான பாதையில் வழி நடத்தும். நன்மைகள் தீமைகளை அறிந்து ஒளியின் பாதையில் நடக்க அருள் தர வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் செபிக்கின்றேன். - ஆமன்
Comments