சுலபமான பத்து , கடினமான பத்து
சுலபமான பத்து!....
1. மற்றவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டுவது சுலபம்
2. நினைத்ததையெல்லாம் பேசுவது சுலபம்
3. நம்மை நேசிப்பவர்களைக் காயப்படுத்துவது சுலபம்
4. வெற்றியில் மகிழ்வது சுலபம்
5. வாழ்கையைக் கொண்டாடுவது சுலபம்
6. உறுதிமொழி தருவது சுலபம்
7.பிறரை விமர்சிப்பது சுலபம்
8. தவறுகள் செய்வது சுலபம்
9. பிறர்மீது பழிபோடுவது சுலபம்
10 பிறரிடம் இருந்து பெறுவது சுலபம்
கடினமான பத்து!..
1. நம்முடைய தவறுகளை அறிந்து கொள்வது கடினம்
2. நாவைக் கட்டுப்படுத்துவது கடினம்
3. நம்மை நேசிப்பவர்களின் காயத்தை ஆற்றுவது கடினம்
4. தோல்வியை ஒப்புக்கொள்வது கடினம்
5. அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வது கடினம்
6. உறுதிமொழியைக் காப்பாற்றுவது கடினம்
7. நம்மைத் திருத்திக் கொள்வது கடினம்
8. தவறுகளிலிருந்து பாடம் கற்பது கடினம்
9. நம்மை விமர்சிப்பதை ஏற்பது கடினம்
10. பிறருக்குத் தருவது கடினம்
கடினமானவை எல்லாம் சுலபமானால் வாழ்வில் ஜெயிப்பது மிகமிகச் சுலபம்..
Comments