ஜெபம்|Tamil Prayer
ஆண்டவரே இயேசுவே!
படைகளின் கடவுளாகிய ஆண்டவரே!
உம்மைத் துதிக்கின்றேன். இஸ்ராயேலரை
ஆயர் என ஆள்பவரே! உம்மைப் புகழ்கின்றேன். உமது ஆற்றலால் என்னை உம்மில் தூண்டி எழுப்பும் தயவிற்காக நன்றி கூறுகின்றேன். ஆண்டவர் அவரைப் பார்த்து, "மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய் ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள். அது அவளிடமிருந்து எடுக்கப்படாது" என்று உமது ஆட்சியை நான் தேடி அடைய வேண்டும் என்பதையும், அதையே வலிமையாகப் பறறிக் கொள்ள வேண்டும் என்பதையும் இன்றைய இறை வார்த்தையில் வாசிக்கினறேன். இரட்சகரே! வாழ்வு தரும் தூய ஆவியே! இந்த பாவ உலக இச்சை நிறைந்த ஊனியல்பின் செயல்களை விட்டு வலிமையான உமது வார்த்தையில் நிலைத்திருக்க எனக்குக் கிருபை தாரும். இயேசுவே ஆண்டவரே! நான் பலவீன பாவி. உமது அன்புக்கு, உமது பரிசுத்த அரவணப்புக்குத் தகுதி இல்லாதவனாய் பல இச்சையான செயல்களால் என் மனதையும், உடலையும் அலங்கரித்து, உலக மோகத்தில் இருக்கும் என்னைக் கழுவி தூய்மையாக்கி உம்மில் வாழ வளர அருள் தாரும். இன்றைய நாளில் தூய ஆவியானவர் என்னை வழிநத்துவாராக! என் பேச்சு செயல்கள் உமக்குப் பிரியமுள்ளவையாக இருக்க அருள்தர வேண்டும் என்றும்; என் வாழ்வில் உம்மைத் தேடி அடைந்திட புனித பவுல் போல் பழையன அனைத்தையும் களைந்து, உமக்கு பணி செய்து வாழ வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் செபிக்கிறேன். - ஆமென்!
Comments