*✠ அருளாளர் சார்லஸ் டி ஃபௌகோல்ட் ✠* (Blessed Charles de Foucauld) மறைசாட்சி: (Martyr) பிறப்பு: செப்டம்பர் 15, 1858 ஸ்ட்ராஸ்பர்க், ஃபிரான்ஸ் (Strasbourg, France) இறப்பு: டிசம்பர் 1, 1916 (வயது 58) டாமன்ரஸ்செட், ஃபிரென்ச் அல்ஜீரியா (Tamanrasset, French Algeria) ஏற்கும் சமயம்: ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church) அருளாளர் பட்டம்: நவம்பர் 13, 2005 திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் (Pope Benedict XVI) நினைவுத் திருவிழா: டிசம்பர் 1 அருளாளர் சார்லஸ் டி ஃபௌகோல்ட், ஒரு ஃபிரென்ச் மறைப்பணியாளரும், கத்தோலிக்க குருவும், அல்ஜீரியாவின் (Algeria) “சஹாரா" (Sahara) பாலைவனத்தில் வாழ்ந்த “துவாரெக்” (Tuareg) மக்களிடையே வாழ்ந்த ஒரு துறவியும் ஆவார். கி.பி. 1916ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட இவர், கத்தோலிக்க திருச்சபையினால் மறைசாட்சியாக மதிக்கப்படுகிறார். பின்னாளில் திருத்தந்தை “பதினாறாம் பெனடிக்ட்” இவருக்கு முக்திபேறு பட்டமளித்து கௌரவித்தார். இவரது எழுத்துக்களும் உத்வேகமும், 1933ம் ஆண்டில் “இயேசுவின் சிறிய சசோதரர்கள்” (Little Brothers of Jesus) என்னும் துறவறசபை நிறுவப்பட வழிவகுத்தத...