புனித யூதா ததேயூவை நோக்கி ஜெபம் மற்றும் புகழ்மாலை


⚜️❣️⚜️❣️⚜️❣️⚜️❣️⚜️❣️⚜️

 மாட்சிமைமிக்க அப்போஸ்தலரும் வேதசாட்சியுமான புனித யூதா ததேயுசே எங்கள் ஆண்டவரும் மீட்பருமான இயேசு கிறிஸ்துவின் நெருங்கிய உறவினரே புண்ணியங்கள் மின்னித்துலங்கும் தூயவரே புதுமை வரங்களில் சிறந்தவரே தம்மை தேடிவந்தவர்களை தப்பாமல் ஆதரிக்கும் தயாள உள்ளங் கொண்டவரே உம்மை நாங்கள் வாழ்த்துகிறோம். இந்த அற்புத வரங்களை உமக்களித்த அன்பு தேவனுக்கு ஆராதனை செலுத்துகிறோம் இதயபூர்வமான நன்றி நவில்கிறோம்.
எங்களுக்குத் தேவையான ஆன்ம சரீர நலன்களையெல்லாம் அடைந்து தந்தருள உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம் சிறப்பாக இப்போது எங்களுக்கு மிகவும் அவசியமாக இந்த வரங்களைப் பெற்றுத்தாரும்.

*(நம் தேவைகளை எடுத்துக் கூறுவோம்)*

நேசிக்கப்படத்தக்கவரும் உள்ளப் பண்பாடு உடையவரும் இறைப் புகழை பாடுபவருமான பெயர்பெற்று இயங்கும் தயாள இருதய ததேயுவே உமது வல்லமையில் எங்கள் நம்பிக்கை வீண் போகவிடாதேயும்.
யூதாசின் பெயர் ஒற்றுமையால்; உமக்கு நேர்ந்த பக்திக் குறையைக் பரிகரித்து வகையின்றி வாடுவோருக்கு வல்லமையுடன் உதவி புரியும் அரிய வரத்தை இறைவன் உமக்கு அளித்திருக்கிறார் என்பதை நினைவு கூர்ந்தருளும்.
இப்பெரிய வரத்திற்காக நாங்களும் உம்முடன் சேர்ந்து இறைவனின் புகழைப் பாடத் துணைபுரியும் அவருக்கு நன்றி செலுத்த தயை செய்யும். நீர் எங்களுக்கு செய்கின்ற இப்பேருதவிக்காக எங்கள் வாழ்நாளெல்லாம் நாங்கள் உமக்கு நன்றியுள்ளவர்களாய் இருப்போம் உமது வல்லமையுள்ள மன்றாட்டை மக்களிடையில் அறியச் செய்வோம். பலர் அறியாப் புனிதரே சிறப்பு இயல்புகள் பல படைத்தவரே பலன் தரும் உமது பக்தி பாரெங்கும் பரவ எங்களால் ஆன பிரயாசையெல்லாம் எடுப்போம் என்றும் உறுதியாய் வாக்களிக்கிறோம்.

*🙏🏻ஆமென்🙏🏻*
 
⚜️❣️⚜️❣️⚜️❣️⚜️❣️⚜️❣️⚜️
*புனித யூதா ததேயூ புகழ் மாலை*
⚜️❣️⚜️❣️⚜️❣️⚜️❣️⚜️❣️⚜️

ஆண்டவரே இரக்கமாயிரும்

கிறிஸ்துவே இரக்கமாயிரும்

ஆண்டவரே இரக்கமாயிரும்

கிறிஸ்துவே எங்களுக்குச் செவிசாய்த்தருளும்.

பரலோக பிதாவாகிய சர்வேசுரா

எங்கள் மேல் இரக்கமாயிரும்

உலக மீட்பரான சுதன் சர்வேசுரா

எங்கள் மேல் இரக்கமாயிரும்

பரிசுத்த ஆவி சர்வேசுரா

எங்கள்மேல் இரக்கமாயிரும்

பரிசுத்த திரியேக சர்வேசுரா

எங்கள் மேல் இரக்கமாயிரும்

பரிசுத்த மரியாயே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

புனித யூதா ததேயுசே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

திருக்குடும்பத்தின் நெருங்கிய உறவினரே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

மாட்சிமை மிக்க அப்போஸ்தலரே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

தெய்வீக ஆசிரியரின் உத்தம மாணக்கரே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

தேவ பராமரிப்புகள் அமைந்த யாத்திரிகரே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

வேத விசுவாசத்தின் சாட்சியே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

தரித்திரத்தை நேசித்தவரே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

தாழ்ச்சிக்கும் பொறுமைக்கும் மாதிரிகையே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

தேவ அன்பின் தீபமே, புனிதத்தின் விண்மீனே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

இறையருளின் பேழையே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

பேய்களை நடுநடுங்கச் செய்கிறவரே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

திருச்சபையின் தூணே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

துன்புறுவோரின் ஆறுதலே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

பாவிகளுக்காக பரிந்து பேசுபவரே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

திக்கற்றவர்களின் சகாயமே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

திகைக்கின்றவர்களின் பிரகாசமே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

நம்பிக்கையிழந்தவர்களின் ஊன்றுகோலே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

வியத்தகு அற்புதங்களைச் செய்கிறவரே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

தேவவரங்களை வழங்குவதில் மிகவும் பேறுபெற்றவரே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

உம்மை மன்றாடுவோர்க்கு தப்பாமல் உதவி புரிபவரே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

உம்மிடம் நம்பிக்கை வைப்பவர்களுக்குத் தவறாமல் உதவி செய்கிறவரே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

அவசரமுள்ளவர்களுக்கு தாமாகவே வந்துதவும் பேருபகாரியே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

இக்கட்டான வேளைகளில் உடன் உதவிபுரிய வல்லமை வாய்ந்தவரே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

திக்கற்றவர்களுக்காகப் பரிந்து பேசுவதில் பேர் பெற்றவரே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

உம்மை வணங்குவோர்க்கு அன்புள்ள மெய்க்காப்பாளரே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

எங்கள் சிறப்பு பாதுகாவலரே, 

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,

உலகின் பாவங்களைப் போக்குகிற சர்வேஸ்வரனுடைய செம்மறி புருவையாகிய இயேசுவே..!

எங்கள் மன்றாட்டை கேட்டருளும் ஆண்டவரே.

உலகின் பாவங்களைப் போக்குகிற சர்வேஸ்வரனுடைய செம்மறி புருவையாகிய இயேசுவே..!

எங்கள் பாவங்களைப் போக்கியருளும் ஆண்டவரே.

உலகின் பாவங்களைப் போக்குகிற சர்வேஸ்வரனுடைய செம்மறி புருவையாகிய இயேசுவே..!

எங்கள் மேல் இரக்கமாயிரும் ஆண்டவரே.

*🙏🏻செபிப்போமாக🙏🏻*

எல்லா வல்லமையும் இரக்கமும் உள்ள மீட்பரான ஆண்டவரே உமது அளவில்லாத அன்புக்குரியவரும் உமது மனித அவதாரத்தில் நெருங்கிய உறவினரும் - அப்போஸ்தலருமான புனித யூதா ததேயுஸ் வழியாக நாங்கள் கேட்கும் மன்றாட்டுக்களையெல்லாம் தயவாய்த் தந்தருளும்படி உம்மை மன்றாடுகிறோம் - ஆமென்.

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு