Posts

உத்தரிக்கிற ஆத்துமாக்களின் வணக்க மாதம்

Image
*உத்தரிக்கிற ஸ்தலத்தை நினைத்து தியானிக்கிறது.. எவ்வளவு நல்லதென்று காண்பிக்கிற விளக்கமாவது* _தியானம்:_  இந்தக் கடைசி தியானத்தில், நமது நினைவினால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இறங்கி நமது விசுவாசமாகிய ஞானக்கண்ணால் அதிலே அகோரமாய் எரியும் நெருப்பைக்கண்டு, அங்கே வெகுவாய் வருத்தப்படுகிற ஆத்துமாக்களைத் தரிசித்து, அதனால் நமக்கு யாதொரு சுகிர்த பிரயோசனத்தைத் தேட வேணும். இந்தத் தியானத்தினால் அநேக பெரும் பாவிகள் மனந்திரும்பினதுமன்றியே, தேவ ஊழியத்தில் அசட்டையாயிருந்தவர்களில் அனேகர் ஞானச் சுறுசுறுப்படைந்து உத்தம கிறிஸ்துவர்ளானார்களென்கிறது சரியே.  கிறிஸ்துவர்களே! நீங்களும் முன் தியானங்களில் சொன்னதைச் சுருக்கமாய்த் தியானிப்பதற்காகவும் உங்கள் பக்தியை எப்போதும் தூண்டி விடுகிறதற்காகவும் பின் வரும் புத்திமதிகளை தெரிந்து கொள்ளவேணும்: முதலாவது சர்வேசுரனாலே உண்டாக்கப்பட்டு நமது ஆண்டவரான சேசுநாதருடைய திவ்விய இரக்கத்தினால் மீட்டிரட்சிக்கப்பட்ட அந்த ஆத்துமாக்கள் அவ்வளவு கடின வேதனைகளால் உபாதிக்கப் படுகிறதற்கு முகாந்தரமென்ன ? அவர்கள் பூலோகத்தில் கட்டிக் கொண்ட சொற்ப பாவங்களுக்கும் செய்ய வேண்டிய பரி...

புனித யூதா ததேயூவை நோக்கி ஜெபம் மற்றும் புகழ்மாலை

Image
⚜️❣️⚜️❣️⚜️❣️⚜️❣️⚜️❣️⚜️  மாட்சிமைமிக்க அப்போஸ்தலரும் வேதசாட்சியுமான புனித யூதா ததேயுசே எங்கள் ஆண்டவரும் மீட்பருமான இயேசு கிறிஸ்துவின் நெருங்கிய உறவினரே புண்ணியங்கள் மின்னித்துலங்கும் தூயவரே புதுமை வரங்களில் சிறந்தவரே தம்மை தேடிவந்தவர்களை தப்பாமல் ஆதரிக்கும் தயாள உள்ளங் கொண்டவரே உம்மை நாங்கள் வாழ்த்துகிறோம். இந்த அற்புத வரங்களை உமக்களித்த அன்பு தேவனுக்கு ஆராதனை செலுத்துகிறோம் இதயபூர்வமான நன்றி நவில்கிறோம். எங்களுக்குத் தேவையான ஆன்ம சரீர நலன்களையெல்லாம் அடைந்து தந்தருள உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம் சிறப்பாக இப்போது எங்களுக்கு மிகவும் அவசியமாக இந்த வரங்களைப் பெற்றுத்தாரும். *(நம் தேவைகளை எடுத்துக் கூறுவோம்)* நேசிக்கப்படத்தக்கவரும் உள்ளப் பண்பாடு உடையவரும் இறைப் புகழை பாடுபவருமான பெயர்பெற்று இயங்கும் தயாள இருதய ததேயுவே உமது வல்லமையில் எங்கள் நம்பிக்கை வீண் போகவிடாதேயும். யூதாசின் பெயர் ஒற்றுமையால்; உமக்கு நேர்ந்த பக்திக் குறையைக் பரிகரித்து வகையின்றி வாடுவோருக்கு வல்லமையுடன் உதவி புரியும் அரிய வரத்தை இறைவன் உமக்கு அளித்திருக்கிறார் என்பதை நினைவு கூர்ந்தருளும். இப்பெரிய வரத்த...

உயிர் நீத்தோர்க்கும் அன்பு காட்ட மறவாதே.

Image
🏮🕯️🏮🕯️🏮🕯️🏮🕯️🏮 சீராக்கின் ஞானம் 7 :33 ✝️ 🏮🕯️🏮🕯️🏮🕯️🏮🕯️🏮 ✝️ ஏனெனில் வீழ்ந்தோர் மீண்டும் எழுவர் என்பதை எதிர் பார்த்திருக்கவில்லை என்றால், அவர் இறந்தோருக்காக மன்றாடியது தேவையற்றதும் மடமையும் ஆகும்.  ✝️ ஆனால் இறைப்பற்றுடன் இறந்தோர் சிறந்த கைம்மாறு பெறுவர் என்று அவர் எதிர்பார்த்திருப்பாரெனில், அது இறைப்பற்றை உணர்த்தும் தூய எண்ணமாகும். ஆகவே இறந்தவர்கள் தங்கள் பாவத்தினின்று விடுதலை பெறும்படி அவர் அவர்களுக்காகப் பாவம் போக்கும் பலி ஒப்புக்கொடுத்தார்.  2 மக்கபேயர் 12 : 44 - 45 ✝️ ⚜️🕯️⚜️🕯️⚜️🕯️⚜️🕯️⚜️ *உத்தரிக்கிற ஸ்தலத்திலுள்ள ஆத்துமங்களுக்காக ஜெபம் மற்றும் புகழ்மாலை* ⚜️🕯️⚜️🕯️⚜️🕯️⚜️🕯️⚜️ திவ்விய இயேசுவே உத்தரிக்கிற ஸ்தலத்தின் ஆத்துமங்கள் பேரில் இரக்கமாயிரும் . தாவீது அரசரின் புத்திரனாகிய இயேசுவே ! சிலுவைப் பாரத்தால் அதிகரித்த உமது திருக்காயங்களின் கொடிய வேதனைகளைப் பார்த்து , உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்கள் பேரில் இரக்கமாயிரும் .சுவாமி , தேவரீர் அன்று சிலுவைப் பீடத்தில் பலியாகும்போது பச்சாதாபக் கள்ளனுக்குக் கிருபை புரிந்தது போல இந்த ஆத்துமங்கள் பேரில் ...

சக்கேயுவே, விரைவாய் இறங்கி வா. இன்று உன் வீட்டில் நான் தங்கவேண்டும் .( லூக்.19:5)

Image
Christian Irai Padalgal Youtube  சக்கேயு தலைமை ஆயக்காரன், பெரிய பணக்காரன். ஆயக்காரன் என்றால் வரி வசூலிப்பவன். யூதர்களிடம் வரி வசூலித்து, வரிப்பணத்தை ரோமை அரசுக்கு செலுத்துபவன். வரி வசூதிப்பவர்கள் யூதர்களால் பாவிகள் என கருதப்பட்டார்கள். மனிதர்கள் அனைவருமே பாவிகள் தான். பாவிகளைத் தேடித்தான் இயேசு உலகிற்கு வந்தார். இயேசு யெரிக்கோ வழியாக பயணித்துக் கொண்டிருந்தபோது சக்கேயு அவரைப் பார்க்க ஆசைப்பட்டான். ஆனால் அவன் குள்ளமாக இருந்ததால் கூட்டத்தில் அவரால் அவரைப் பார்க்க முடியவில்லை. அவரைக் காணும்பொருட்டு முன்னே ஓடி ஒருகாட்டு அத்திமரத்தில் ஏறிக்கொண்டான். இயேசு அந்த இடத்திற்கு வந்தபோது, ஏறெடுத்து அவனை நோக்கி, "சக்கேயுவே, விரைவாய் இறங்கி வா. இன்று உன் வீட்டில் நான் தங்கவேண்டும்" என்றார். இதிலிருந்து என்ன தெரிகிறது? சக்கேயு இயேசுவைப் பார்க்க ஆசைப்படும் முன்பே இயேசு அவனைப் பார்க்க ஆசைப்பட்டு விட்டார். இயேசுவின் ஆசை நித்தியமானது. யெரிக்கோ வழியாக செல்லும் போது சகேயுவைப் பார்க்க வேண்டும்,  அவனது வீட்டில் வந்து அன்று தங்க வேண்டும் என்று அவர் நித்திய காலத்திலிருந்தே திட்டமிட்டு விட்ட...

நமது காவல் தூதரிடம் மன்றாடுவோம்

Image
🍥❤🍥❤🍥❤🍥❤ நமது காவல் தூதரிடம் மன்றாடுவோம்🙏✝️🧚‍♂️✝️🙏 🍀🌺🍀🌺🍀🌺🍀🌺 ✝️🧚‍♂️ நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி, தம் தூதர்க்கு அவர் கட்டளையிடுவார்.  ✝️🧚‍♂️உம் கால் கல்லின்மேல் மோதாதபடி, அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக்கொள்வர்.  திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 91:11-12 🧚‍♂️✝️🙏✝️🧚‍♂️ எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனால் எங்களுக்கு பாதுகாப்புத் தந்திட ஏற்படுத்தப்பட்டுள்ள எங்கள் இறைவனின் வான தூதரே! 🧚‍♂️✝️🙏 எங்களுக்கு ஞான ஒளியைத் தந்து எல்லாத் தீமையிலிருந்தும் பாதுகாத்திட வேண்டும் என்று மன்றாடுகிறோம் 🙏✝️🙏  ஆமென் 🧚‍♂️✝️🙏✝️🧚‍♂️ ☀🌹☀🌹☀🌹☀🌹☀

உயிர்த்த இயேசு விண்ணேற்றம் அடையும் வரை என்ன செய்தார்?

Image
உயிர்த்த இயேசு தம் சீடர்களுக்குப் பல முறை தோன்றி அவர்களை நம்பிக்கையில் உறுதிப்படுத்தி வந்தார். 

சிலுவைச் சாவோடு இயேசுவின் வாழ்வு முடிந்துவிட்டதா?

Image
இல்லை. இயேசு தாம் முன்னுரைத்தவாறு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். உயிர்த்த நாற்பதாம் நாள் விண்ணேற்றம் அடைந்தார். உலக முடிவு வரை எந்தநாளும் நம்முடன் இருக்கிறார்.