Posts

Showing posts from June, 2021

இரத்தம் திரு இரத்தம். Retham thiru Retham

  இரத்தம் திரு இரத்தம் என் இயேசுவின் திரு இரத்தம் -2 சிலுவையிலிருந்து ஒழுகும் இரத்தம் -2 நதியாய் பாயட்டுமே என்னில் நித்தியமாய் -2 என் பாவத்தினால் அறைந்தேன் சிலுவையில் குத்தினேன் விலாவில் ஈட்டியாய் -2 விலாவிலிருந்து பொங்கிய இரத்தத்தை  என்மேல் விழச் செய்தார் -2 விழுந்தது அவர் இரத்தம் - நான்  அறிந்தேன் ஒரு சத்தியம் -2 இவரே மெசியா இவரே மெசியா -2  காயங்களேற்ற உம் கரங்களை நீட்டி  அருகில் ஓடி வந்திடுவாய் -2 உந்தன் இரத்த மேணியால் எந்தன் உடலை  சேர்த்து அணைத்துக் கொள்வாய் -2  என்னைக் சேர்த்தார்  உடலோடு - அவர்  கழுவினார் இரத்தத்தாலே -2  நீரே மெசியா நீரே மெசியா.

விடியலை தேடும் மனிதர்கள் நடுவில் விடிந்திடும் தேவன் நம் தேவன்

  விடியலை தேடும் மனிதர்கள் நடுவில்  விடிந்திடும் தேவன் நம் தேவன்  வறியவர் வாழ்வினில் வளமை சேர்த்து  வாழ்வு கொடுப்பவன் நம் தேவன்  விடுதலை  குருடர் எல்லோருக்கும் புதுப்பார்வை  செவிடர் முடவருக்கு புது வாழ்வு  பழமைத்தனங்கள் ஒழிந்திட  கோழைத் தனங்கள் அழிந்திட  பகைவர்கள் நண்பர்கள் ஆகிட  ஒளிரும் மிளிரும் அன்பால் இன்று  மலரும் புதிய உலகம்  ஏழைகள் எல்லோர்க்கும் நற்செய்தி  இளையவர் எல்லோர்க்கும் புதுச்செய்தி  அடிமைத்தனங்கள் ஒழிந்திட  போலித்தனங்கள் அழிந்திட  உழைப்பவர் உரிமைகள் பெற்றிட

உறவாகி உறவாகி வாழ்வாகி வழியாகி

  உறவாகி உயிராகி வாழ்வாகி வழியாகி   வழிகாட்டும் எம் இயேசுவே  உன்னிலே சரணாகதி  நலம் கண்டு நலம் வாழ வழி சொல்லித்தா  போராடும் என் வாழ்வில் வழி சொல்லித்தா  நீயின்றி நானில்லை வழி சொல்லித்தா  உன்னன்பில் யாம் வாழும் வழி சொல்லித்தா -எம்  கரம் பற்றி கரை சேர்த்து வழி சொல்லித்தா  இருளாகும் எம் வாழ்வில் வழி சொல்லித்தா  ஒளியாக சுடரேற்றி வழி சொல்லித்தா  தீதின்றி தினம் வாழ வழி சொல்லித்தா -உன்  திருவடியில் சரணடைய வழி சொல்லித்தா 

ஆண்டவரே ஈசோப் புல்லினால் என்மேல் தெளிப்பீர்

  ஆண்டவரே ஈசோப் புல்லினால் என்மேல் தெளிப்பீர் நானும் தூய்மையாவேன் நீரே என்னைக் கழுவ - நானும் உறை பனி தனிலும் வெண்மையாவேன் இறைவா உமது இரக்கப் பெருக்கத்திற்கு ஏற்ப என் மேல் இரக்கம் கொள்வீர் பிதாவும் சுதனும் தூய ஆவியும் துதியும் புகழும் ஒன்றாய்ப் பெறுக ஆதியில் இருந்ததுபோல் இன்றும் என்றும் நித்தியமாகவும் - ஆமேன்