இரத்தம் திரு இரத்தம். Retham thiru Retham

 இரத்தம் திரு இரத்தம்

என் இயேசுவின் திரு இரத்தம் -2

சிலுவையிலிருந்து ஒழுகும் இரத்தம் -2

நதியாய் பாயட்டுமே என்னில் நித்தியமாய் -2


என் பாவத்தினால் அறைந்தேன் சிலுவையில்

குத்தினேன் விலாவில் ஈட்டியாய் -2

விலாவிலிருந்து பொங்கிய இரத்தத்தை 

என்மேல் விழச் செய்தார் -2

விழுந்தது அவர் இரத்தம் - நான் 

அறிந்தேன் ஒரு சத்தியம் -2

இவரே மெசியா இவரே மெசியா -2 


காயங்களேற்ற உம் கரங்களை நீட்டி 

அருகில் ஓடி வந்திடுவாய் -2

உந்தன் இரத்த மேணியால் எந்தன் உடலை 

சேர்த்து அணைத்துக் கொள்வாய் -2 

என்னைக் சேர்த்தார்  உடலோடு - அவர் 

கழுவினார் இரத்தத்தாலே -2 

நீரே மெசியா நீரே மெசியா.




Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு