உறவாகி உறவாகி வாழ்வாகி வழியாகி
உறவாகி உயிராகி வாழ்வாகி வழியாகி
வழிகாட்டும் எம் இயேசுவே
உன்னிலே சரணாகதி
நலம் கண்டு நலம் வாழ வழி சொல்லித்தா
போராடும் என் வாழ்வில் வழி சொல்லித்தா
நீயின்றி நானில்லை வழி சொல்லித்தா
உன்னன்பில் யாம் வாழும் வழி சொல்லித்தா -எம்
கரம் பற்றி கரை சேர்த்து வழி சொல்லித்தா
இருளாகும் எம் வாழ்வில் வழி சொல்லித்தா
ஒளியாக சுடரேற்றி வழி சொல்லித்தா
தீதின்றி தினம் வாழ வழி சொல்லித்தா -உன்
திருவடியில் சரணடைய வழி சொல்லித்தா
Comments