விடியலை தேடும் மனிதர்கள் நடுவில் விடிந்திடும் தேவன் நம் தேவன்
விடியலை தேடும் மனிதர்கள் நடுவில்
விடிந்திடும் தேவன் நம் தேவன்
வறியவர் வாழ்வினில் வளமை சேர்த்து
வாழ்வு கொடுப்பவன் நம் தேவன்
விடுதலை
குருடர் எல்லோருக்கும் புதுப்பார்வை
செவிடர் முடவருக்கு புது வாழ்வு
பழமைத்தனங்கள் ஒழிந்திட
கோழைத் தனங்கள் அழிந்திட
பகைவர்கள் நண்பர்கள் ஆகிட
ஒளிரும் மிளிரும் அன்பால் இன்று
மலரும் புதிய உலகம்
ஏழைகள் எல்லோர்க்கும் நற்செய்தி
இளையவர் எல்லோர்க்கும் புதுச்செய்தி
அடிமைத்தனங்கள் ஒழிந்திட
போலித்தனங்கள் அழிந்திட
உழைப்பவர் உரிமைகள் பெற்றிட
Comments