மனத் துயர் செபம்
எல்லாம் வல்ல இறைவா! நீர் அளவில்லாத அனைத்து நன்மைகளும் நிறைந்தவராக இருப்பதால் எல்லாவற்றிற்கும் மேலாக நான் உம்மை முழு மனதோடு அன்பு செய்கிறேன். இப்படிப்பட்ட உமக்கு எதிராகப் பாவங்களைச் செய்ததால் நான் மிகவும் மனம் வருந்துகிறேன். எனக்கு இந்த மனத்துயரின்றி வேறு மனத்துயரில்லை. எனக்கு இந்தத் துக்கமின்றி வேறு துக்கமில்லை. இனி ஒருபோதும் இப்படிப்பட்ட பாவங்களைச் செய்வதில்லையென்று உறுதி செய்கிறேன். மேலும், எனக்கு வலுவில்லாததால் இயேசு கிறிஸ்து பாடுபட்டு சிந்தின திரு இரத்தத்தால் என் பாவங்களை எல்லாம் கழுவி, மன்னித்து, உமது இரக்கத்தையும், விண்ணக நிலைவாழ்வையும் தந்தருளுவீர் என்று முழுமனதோடு நம்புகிறேன். திரு அவை நம்பிக்கையோடு கற்றுத் தரும் உண்மைகளை எல்லாம் நீரே கற்றுத் தந்தது என நான் உறுதியாக நம்புகிறேன். ஆமென்.
Comments