திருக்குடும்பத்தின் மன்றாட்டு மாலை

ஆண்டவரே இரக்கமாயிரும்

கிறிஸ்துவே இரக்கமாயிரும்

ஆண்டவரே இரக்கமாயிரும்       

கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்

கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைத் தயவாய்க் கேட்டருளும்

விண்ணகத்தில் இருக்கிற தந்தையாகிய இறiவா, - எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.

ஊலகத்தை மீட்ட திருமகனாகிய இறiவா ரூனெயளர் எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.

தூய ஆவியாகிய இறiவா - எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.

மூன்று ஆட்களாயிருக்கும் ஒரே இறiவா - எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.

அவதரித்த தேவ வார்த்தையின் திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மண்ணுலகில் அதி புனித திருத்துவத்தின் பாவனையாகிய திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பரம தேவ பிதா அத்தியந்த பிரியத்துடனே நேசித்த திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அனைத்து அருளாலும் நிறைந்து அலங்கரிக்கப் பட்ட திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எல்லாப் புண்ணியங்களுக்கும் உத்தம மாதிரிகையான திருக்குடும்பமே, எல்லா இருதயங்களின் நேசத்துக்கும் பாத்திரமான திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

விண்ணுலகிற்குத் தேர்ந்தெக்கப்பட்டவரின் ஞானக் கருவூலமாகிய திருக்குடும்பமே, விண்ணுலகின் பேரின்பமாகிய திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அனைத்து வானதூதர்களாலும் வணங்கப்பட்ட திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மனிதர்களால் நிந்திகரிக்கப்பட்டிருந்தாலும் தேவ சமூகத்தில் உன்னத மாட்சிமை பொருந்திய திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பெத்லகேம் ஊரார்களால் புரக்கணிக்கப்பட்டு ஒரு மாட்டுக் கொட்டிலில் ஒடுங்கிப்போக அவசரப்பட்ட திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

திவ்விய இரடசகர் பிறந்த சமயத்தில் இடையர்களால் சந்திக்கப்பட்ட திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிறந்த திவ்விய குழுந்தைக்குத் தோத்திரமாக வானதூதர்கள் இசைத்த கீதங்களைக் கேட்ட திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மூன்று அறிஞர்களால் வணங்கிப் பாதகாணிக்கை ஒப்புக்கொடுக்கப்பட்ட திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஆலயத்தில் திவ்விய பாலனை ஏந்தின சிமியோன் அவரைக் குறித்துச் சொல்லிய துதிகளையும் இறைவாக்குகளையும் கேட்டு மகிழ்ச்சியும் துயரமும் கொண்ட திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எண்ணிறந்த ஆபத்துக்குள்ளே எகிப்து தேசத்துக்கு ஓடிப்போக கட்டளையிட்ட வானதூதரின் வாக்குக்கு தாமதமின்றி கீழ்ப்படிந்த திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஏரோது அரசனின் கொடுமைக்குத் தப்பித்துக் கொள்ள அத்தேசத்துக்கு கட்டாயப்பட்ட திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அந்நிய தேசத்தில் பரதேசியான திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மண்ணுலகம் அறிந்து கொள்ளாமல் மறைந்த தன்மையாய் வாழ்ந்து வந்த திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஏழ்மையும் உழைப்பும் தவமுமுள்ள சீவியமாய் சீவித்த திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நெற்றி வியர்வை நிலத்தில் விழ, அன்றாட உணவைத் தேடிகொண்ட திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மண்ணுலக வறுமையும் விண்ணுலக நன்மையும் மிகுதியும் கொண்டிருந்த திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிறர்சிநேகத்துக்கும் சமாதான ஒற்றுமைக்கும் மாதிரிகையான திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நினைவிலும் மனப்பற்றுதலினாலும் முழுவதும் விண்ணுலகில் சஞ்சரித்திருந்த திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உமது ஆயுள் முழுமையும் இடைவிடாது செபமும் ஞானயோகமுமாயிருந்த திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

துன்பப்படுகிறவர்களுக்கு ஆறுதலும் உம்மை மன்றாடுகிறவர்களின் நம்பிக்கையும் எல்லாக் கிறிஸ்தவர்களின் குடும்பங்களுக்குச் சுகிர்த மாதிரிகையுமாகிய திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உலகின் பாவங்களைப் போக்கும் கடவுளின் ஆட்டுக்குட்டியே,
எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.
  
உலகின் பாவங்களைப் போக்கும் கடவுளின் ஆட்டுக்குட்டியே,
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்; சுவாமி

உலகின் பாவங்களைப் போக்கும் கடவுளின் ஆட்டுக்குட்டியே,
எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.

கூகூமுதல்: ரூனெயளர் இயேசுவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.கூகூ
கூகூதுனை: ரூனெயளர் இயேசுவே எங்கள் மன்றாட்டை நன்றாகக் கேட்டருளும்.கூகூ

செபிப்போமாக

இறைவா, திருக்குடும்பத்தின் சிறப்புமிக்க முன்மாதிரியை எங்களுக்கு அளித்தீரே, எம்மீது இரங்கி, இல்லறத்தின் புண்ணியங்களிலும் அன்பின் உறவுகளிலும் அக்குடும்பத்தை நாங்கள் பின்னற்றி, உமது முடிவற்ற சம்பாவனையைப் பெற்று மகிழச் செய்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம். ரூனெயளர் ஆமென

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு