Posts

ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன் அடிமை நான் ஐயா

Image
ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன் அடிமை நான் ஐயா ஆயிரம் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும் அகன்று போமாட்டேன் – உம்மைவிட்டு அகன்று போகமாட்டேன் 1. ஒவ்வொரு நாளும் உம்குரல் கேட்டு அதன்படி நடக்கின்றேன் உலகினை மறந்து உம்மையே நோக்கி ஓடி வருகின்றேன் 2. வேதத்திலுள்ள அதிசயம் அனைத்தும் நன்கு புரியும்படி தேவனே எனது கண்களையே தினமும் திறந்தருளும் 3. வாலிபன் தனது வழிதனையே எதனால் சுத்தம் பண்ணுவான் தேவனே உமது வார்த்தையின்படியே காத்துக் கொள்வதனால் 4. நான் நடப்பதற்கு பாதையைக் காட்டும் தீபமே உம் வசனம் செல்லும் வழிக்கு வெளிச்சமும் அதுவே தேவனே உம் வாக்கு 5. தேவனே உமக்கு எதிராய் நான் பாவம் செய்யாதபடி உமதுவாக்கை என் இருதயத்தில் பதித்து வைத்துள்ளேன்

மகிழ்ச்சி நிறை மறை உண்மைகள்

Image
தந்தை! மகன்! தூய ஆவியாரின்! பெயராலே - ஆமென். தூய ஆவியார் செபம் தூய ஆவியாரே / எழுந்தருளி வாரும். விண்ணகத்திலிருந்து / உமது பேரொளியின் அருள் சுடர் எம் மீது அனுப்பிடுவீர். எளியோரின் தந்தையே வந்தருள்வீர் / நன்கொடை வள்ளலே வந்தருள்வீர் / இதய ஒளியே வந்தருள்வீர். உன்னத ஆறுதல் ஆனவரே / ஆன்ம இனிய விருந்தினரே / இனிய தன்மைத் தருபவரே / உழைப்பின் களைப்பைத் தீர்ப்பவரே / வெம்மைத் தணிக்கும் குளிர் நிழலே / அழுகையில் ஆறுதல் ஆனவரே / உன்னதப் பேரின்ப ஒளியே / உம்மை நம்புவோருடைய இதயத்தின் ஆழம் நிரப்பிடுவீர். உமது அருள் ஆற்றல் இல்லாமல் மனிதரில் எதுவும் இல்லை / நல்லது அவனில் எதுவும் இல்லை / மாசு கொண்டதைக் கழுவிடுவீர். வரட்சியுற்றதை நனைத்திடுவீர். காயப்பட்டதை ஆற்றிடுவீர். வணங்காதிருப்பதை வளைத்திடுவீர். குளிரானதை குளிர் போக்கிடுவீர். தவறிப் போனதை ஆண்டருள்வீர். இறைவா உம்மை நம்பும் அனைவருக்கும் / உமது ஏழு கொடைகளையும் வழங்கிடுவீர். புண்ணியப் பலன்களையும் வழங்கிடுவீர் / இறுதியில் மீட்பை அளித்து அளவில்லாத இன்பமும் அருள்வீரே. -ஆமென். தொடக்க செபம் எல்லா நன்மைகளும் நிறைந்த அன்பு இறைவா, கெட்ட மனித...

வற்றாத வரங்களின் ஊற்றே அம்மா

முஞ்சிறை ஊர் வாழும் அம்மா எம் குறை தீர்ப்பாயே அம்மா வற்றாத வரங்களின் ஊற்றே அம்மா (2) நலம் தரும் ஆரோக்கிய தாயே அம்மா துன்பங்கள் மலை போல வந்தாலும் அம்மா உன் அன்புக்கரம் கொண்டு அணைப்பாயே துயரங்கள் அலைபோல எழுந்தாலும் (2) பாசத்தால் ஆதரித்துக் காப்பாயே -அம்மா அம்மா நலமற்று யாம் வாடும் போதெல்லாம் அம்மா உன் நம்பிக்கை தந்தென்மை நடத்திட்டாய் நலிவுற்று நடை சோர்ந்து போனாலும் -2 உடல் உள்ளம் நலம் தந்து உடனிருப்பாய் -அம்மா அம்மா

அருள் நிறை மரியே வாழ்க ஆண்டவர் உம்முடனே

Image
அருள் நிறை மரியே வாழ்க ஆண்டவர் உம்முடனே பெண்களிலே நீர் பேறுபெற்றீர் உம் மகனும் வாழியவே (2) பரிசுத்த மரியாயே எங்கள் பரமனின்தாயாரே பாவிகள் எங்களுக்காய் பரமனை மன்றாடும் இப்போதும் நீர் மன்றாடும எப்போதும் நீர் மன்றாடும் தீமைகள் நெருங்குகையிலே பரமனை மன்றாடும் மரணம் வருகையிலே எம்மைத் தாங்குமம்மா (2)

அம்மா என் அம்மா நீ தானம்மா Amma En Amma Neethan Amma

Image
அம்மா என் அம்மா நீ தானம்மா பிள்ளை உன் பிள்ளை நான் தானம்மா ஆரோக்கியம் தருகின்ற தாய் நீ அம்மா அடைக்கலம் தருகின்ற தாய் நீ அம்மா 1.அருளின் ஒளியை தந்தீரே  ஆசையாய் அன்பை பொழிந்தீரே  இதயத்தில் என்னை நினைத்தீரே  இதயம் மகிழ வாழ்ந்திடுவேன்  அம்மா என்று அழைக்கும் போது  மகளே என்று ஓடிவந்து  கலங்கிய என்னை கரம் பிடித்தாய் (2) 2.உறவில் நாளும் வளர்ந்திடவே  ஊக்கம் என்னில் தந்தீரே  உந்தன் உள்ளம் நினைப்பது போல்  நான் உலகில் நாளும் வாழ்ந்திடுவேன்  அம்மா என்று அழைக்கும் போது   மகளே என்று ஓடிவந்து  கலங்கிய என்னைக் கரம் பிடித்தாய் (2)

வெற்றி தரும் ஜெபமாலை அன்னை கற்று தந்த ஜெபமாலை பாடல் வரிகள் Vetri Tharum Jebamalai Lyrics

வெற்றி தரும் ஜெபமாலை அன்னை கற்றுதந்த ஜெபமாலை (2) ஜெபிப்போம் ஜெபிப்போம்  ஜெபமாலை ஜெபிப்போம் துதிப்போம் துதிப்போம் துயர் நீங்க துதிப்போம் (2) வெற்றி தரும் ஜெபமாலை அன்னை கற்றுதந்த ஜெபமாலை பரலோகத்தில் இருக்கும் நமது தந்தையே தொழுது தொடங்கும் ஜெபமாலை  அவள் பரிவுடன் நம்மை மீட்டருள் புரியும் மறையுரையே ஜெபமாலை (2) அருள் நிறை மரியே அருள் நிரை மரியே என்று வேண்டும் ஜெபமாலை (2) பிள்ளை குரல் கேட்டு அன்னை விரைந்து  வந்து அரவணைக்க செய்யும் ஜெபமாலை (2)               மூவொரு இறைவனை மீண்டும் மீண்டுமாய் துதித்து துலங்கும் ஜெபமாலை இங்கு யாவரும் வேண்டும் அமைதியும் அன்பும் தந்திடுமே ஜெபமாலை (2) அறிந்தும் அறியாது புரிந்த பாவ பரிகாரம் செய்யும் ஜெபமாலை (2) நாம் விசுவாசத்தோடு வளர்நதோங்கி வாழ்வு பரிசடைய செய்யும் ஜெபமாலை  (2)

Special Act of Sorrow

Image
Special Act of Sorrow F orgive me my sins, O Lord, forgive me my sins; the sins of my youth, the sins of my age, the sins of my soul, the sins of my body; my idle sins, my serious voluntary sins, the sins I know, the sins I have concealed so long, and which are now hidden from my memory. I  am truly sorry for every sin, mortal and venial, for all the sins of my childhood up to the present hour. I  know my sins have wounded Thy tender Heart, O my Savior, let me be freed from the bonds of evil through the most bitter Passion of my Redeemer. O  my Jesus, forget and forgive what I have been. Amen.