மகிழ்ச்சி நிறை மறை உண்மைகள்


தந்தை! மகன்! தூய ஆவியாரின்! பெயராலே
- ஆமென்.

தூய ஆவியார் செபம்

தூய ஆவியாரே / எழுந்தருளி வாரும். விண்ணகத்திலிருந்து / உமது பேரொளியின் அருள் சுடர் எம் மீது அனுப்பிடுவீர்.

எளியோரின் தந்தையே வந்தருள்வீர் / நன்கொடை வள்ளலே வந்தருள்வீர் / இதய ஒளியே வந்தருள்வீர்.

உன்னத ஆறுதல் ஆனவரே / ஆன்ம இனிய விருந்தினரே / இனிய தன்மைத் தருபவரே / உழைப்பின் களைப்பைத் தீர்ப்பவரே / வெம்மைத் தணிக்கும் குளிர் நிழலே / அழுகையில் ஆறுதல் ஆனவரே / உன்னதப் பேரின்ப ஒளியே / உம்மை நம்புவோருடைய இதயத்தின் ஆழம் நிரப்பிடுவீர்.

உமது அருள் ஆற்றல் இல்லாமல் மனிதரில் எதுவும் இல்லை / நல்லது அவனில் எதுவும் இல்லை / மாசு கொண்டதைக் கழுவிடுவீர்.

வரட்சியுற்றதை நனைத்திடுவீர்.

காயப்பட்டதை ஆற்றிடுவீர்.

வணங்காதிருப்பதை வளைத்திடுவீர்.

குளிரானதை குளிர் போக்கிடுவீர்.

தவறிப் போனதை ஆண்டருள்வீர்.

இறைவா உம்மை நம்பும் அனைவருக்கும் / உமது ஏழு கொடைகளையும் வழங்கிடுவீர்.

புண்ணியப் பலன்களையும் வழங்கிடுவீர் / இறுதியில் மீட்பை அளித்து அளவில்லாத இன்பமும் அருள்வீரே. -ஆமென்.

தொடக்க செபம்

எல்லா நன்மைகளும் நிறைந்த அன்பு இறைவா, கெட்ட மனிதரும், நன்றி இல்லாதப் பாவிகளுமாய் இருக்கிற எங்கள் மீது, அளவில்லாத மாட்சி கொண்டிருக்கின்ற உம்முடைய திருச்சந்நிதியிலே இருந்து செபம் செய்யத் தகுதி அற்றவர்களாய் இருந்தாலும், அளவில்லாத இரக்கத்தை நம்பிக் கொண்டு, உமது மாட்சிக்காகவும், அன்னை மரியாவின் புகழ்ச்சிக்காகவும் ஐம்பத்து மூன்று மணி செபமாலை தொடுக்க ஆசையாய் இருக்கிறோம். இந்த செபத்தை பக்தியோடு செய்து, எவ்வித கவனச் சிதறல்களும் இல்லாமல் முடிக்க உம்முடைய அருளை எங்களுக்குத் தந்தருளும். –ஆமென்

நம்பிக்கை அறிக்கை

விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகின்றேன்.

அவருடைய ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன்.

இவர் தூய ஆவியால் கருவுற்று கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார்.

பொந்தியு பிலாத்துவின் அதிகாரத்தில் படுபட்டுச் சிலுவையில் அறையப்பட்டு, இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி, மூன்றாம் நாள் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்.

விண்ணகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கின்றார்.

அங்கிருந்து வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க வருவார்.

தூய ஆவியாரை நம்புகின்றேன்.

புனித , கத்தோலிக்கத் திரு அவையை நம்புகின்றேன்.

புனிதர்களின் உறவு ஒன்றிப்பை நம்புகின்றேன்.

பாவ மன்னிப்பை நம்புகின்றேன்.

உடலின் உயிர்ப்பை நம்புகின்றேன்.

நிலை வாழ்வை நம்புகின்றேன். ஆமென்

பெரிய மணி : இயேசு கற்பித்த செபம்...

விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக. உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுப் போல, மண்ணுலகிலும் நிறைவேறுக.
எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராக குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களை மன்னியும் எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். –ஆமென்.

மூன்று சிறிய மணிகள்

அருள் நிறைந்த மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுள் ஆசீ பெற்றவர் நீரே, உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீ பெற்றவரே!

புனித மரியே, இறைவனின் தாயே பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக்கொள்ளும். -ஆமென்.

அருள் நிறைந்த மரியே வாழ்க.....

அருள் நிறைந்த மரியே வாழ்க.....

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சிமை உண்டாவதாக தொடக்கத்திலே இருந்தது போல, இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களை மண்ணியும். எங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றும். எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும், உமது இரக்கம் யாருக்கு அதிகத் தேவையோ, அவர்களுக்கு சிறப்பான உதவி புரியும்.

மகிழ்ச்சி நிறை மறை உண்மைகள்

(திங்கள், சனி)


1. கபிரியேல் தூதர் கன்னிமரியாவுக்கு மங்கள வார்த்தை சொன்னதை தியானித்து, தாழ்ச்சி என்னும் வரத்தைக் கேட்டுச் செபிப்போமாக.

ஒரு விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே மந்திரம்...

10 அருள் நிறைந்த மந்திரம்...

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சிமை உண்டாவதாக தொடக்கத்திலே இருந்தது போல, இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களை மண்ணியும். எங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றும். எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும், உமது இரக்கம் யாருக்கு அதிகத் தேவையோ, அவர்களுக்கு சிறப்பான உதவி புரியும்.


2. கன்னி மரியாள் எலிசபெத்தம்மாளைச் சந்தித்ததைத் தியானித்து, பிறரன்பு என்னும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக.

ஒரு விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே மந்திரம்...

10 அருள் நிறைந்த மந்திரம்...

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சிமை உண்டாவதாக தொடக்கத்திலே இருந்தது போல, இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களை மண்ணியும். எங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றும். எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும், உமது இரக்கம் யாருக்கு அதிகத் தேவையோ, அவர்களுக்கு சிறப்பான உதவி புரியும்.


3. இயேசு பிறந்ததைத் தியானித்து, எளிமை என்னும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக.

ஒரு விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே மந்திரம்...

10 அருள் நிறைந்த மந்திரம்...

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சிமை உண்டாவதாக தொடக்கத்திலே இருந்தது போல, இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களை மண்ணியும். எங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றும். எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும், உமது இரக்கம் யாருக்கு அதிகத் தேவையோ, அவர்களுக்கு சிறப்பான உதவி புரியும்.


4. இயேசு கோயிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுத்ததை தியானித்து, இறைவனின் திருவுளத்துக்குப் பணிந்து நடக்கும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக.

ஒரு விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே மந்திரம்...

10 அருள் நிறைந்த மந்திரம்...

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சிமை உண்டாவதாக தொடக்கத்திலே இருந்தது போல, இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களை மண்ணியும். எங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றும். எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும், உமது இரக்கம் யாருக்கு அதிகத் தேவையோ, அவர்களுக்கு சிறப்பான உதவி புரியும்.


5. காணாமற் போன இயேசுவைக் கண்டடைந்ததை தியானித்து, நாம் அவரை எந்நாளும் தேடும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக.

ஒரு விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே மந்திரம்...

10 அருள் நிறைந்த மந்திரம்...

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சிமை உண்டாவதாக தொடக்கத்திலே இருந்தது போல, இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களை மண்ணியும். எங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றும். எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும், உமது இரக்கம் யாருக்கு அதிகத் தேவையோ, அவர்களுக்கு சிறப்பான உதவி புரியும்.

இறுதி செபம்

அதிதூதரான தூய மிக்கேலே, வானதூதர்களான தூய கபிரியேலே, இரஃபேலே திருத்தூதர்களான தூய பேதுருவே, பவுலே, யோவானே, யாக்கோபே, நாங்கள் எத்தனை பாவிகளாய் இருந்தாலும், நாங்கள் மன்றாடிய இந்த ஐம்பத்து மூன்று மணி செபத்தையும் உங்கள் புகழ்ச்சியோடு ஒன்றாகச் சேர்த்துத் புனித அன்னை மரியாவின் திருப்பாதத்தில் காணிக்கையாக வைக்க உங்களை மன்றாடுகிறோம் – ஆமென்

கிருபை தயாபத்து மந்திரம்

கிருபைதயாபத்துக்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க! எங்கள் ஜீவியமே, எங்கள் தஞ்சமே, எங்கள் மதுரமே வாழ்க! பரதேசிகளாயிருக்கிற நாங்கள் ஏவாளின் மக்கள், உம்மைப் பார்த்து கூப்பிடுகிறோம். இந்தக் கண்ணீர்க் கணவாயிலே நின்று பிரலாபித்தழுது, உம்மையே நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம். ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகிற தாயே, உம்முடைய தயாளமுள்ள திருக்கண்களை எங்கள் பேரில் திருப்பியருளும். இதனன்றியே நாங்கள் இந்தப் பரதேசங்கடந்த பிற்பாடு உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுநாதருடைய பிரத்தியட்சமான தரிசனத்தை எங்களுக்குத் தந்தருளும். கிருபாகரியே, தயாபரியே, பேரின்ப இரசமுள்ள கன்னிமரியாயே!

- இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்கள் ஆகும்படி!

- சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். -ஆமென்.

செபிப்போமாக :

சர்வ சக்தியுடையவருமாய் நித்தியருமாய் இருக்கிற இறைவா! முத்திபேறுபெற்ற கன்னித்தாயான மரியாயினுடைய ஆத்துமமும் சரீரமும் தூய ஆவியின் அனுக்கரகத்தினாலே தேவரீருடைய திருமகனுக்கு யோக்கியமான பீடமாயிருக்க ஏற்கெனவே நியமித்தருளினீரே. அந்த திவ்விய தாயை நினைத்து மகிழ்கிற நாங்கள் அவளுடைய இரக்கமுள்ள மன்றாட்டினாலே இவ்வுலகில் சகலப் பொல்லாப்புக்களிலேயும் நித்திய மரணத்திலேயும் நின்று இரட்சிக்கப்படும்படிக்கு கிருபை கூர்ந்தருளும். இந்த மன்றாட்டுக்களையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். – ஆமென்.

மிகவும் இரக்கமுள்ள தாயே!

மிகவும் இரக்கமுள்ள தாயே! தூய கன்னி மரியே! இதோ.. உம்முடைய அடைக்கலமாக ஓடிவந்து சரணடைந்து உமது அருட்காவலை மன்றாடிய ஒருவரையும் நீர் கைவிட்டதாக உலகில் ஒருபோதும் சொல்லக் கேள்விப்பட்டதில்லை என்பதை நினைத்தருளும் கன்னியருடைய அரசியான கன்னிகையே தயையுள்ள தாயே! இப்படிப்பட்ட நம்பிக்கையால் நான் தூண்டபெற்று அடியேன் உம் திருப்பாதம் அண்டி வருகிறேன். பாவியாகிய நான் உம் திருமுன் துயரத்தோடு உமது இரக்கத்திற்காக காத்து நிற்கிறேன். மனுவுருவான திருமகனின் தாயே! எம் மன்றாட்டைப் புறக்கணியாமல் எனக்காக தயாவாய் வேண்டிக்கொள்ளும். - ஆமென்

ஜென்பப்பாவமில்லாமல் உற்பவித்த அர்ச்சிஸ்ட மரியாயே, பாவிகளுக்கு அடைக்கலமே, இதோ உம்முடைய அடைக்கலமாக ஓடிவந்தோம். எங்கள் பேரில் இரக்கமாயிருந்து எங்களுக்காக உமது திருக்குமாரனிடம் வேண்டிக்கொள்ளும். -அருள்நிறைந்த (3 முறை)

புனித தேவமாதாவின் பிராத்தனை

சுவாமி கிருபையாயிரும்
- சுவாமி கிருபையாயிரும்

கிறிஸ்துவே கிருபையாயிரும்
- கிறிஸ்துவே கிருபையாயிரும்

சுவாமி கிருபையாயிரும்
- சுவாமி கிருபையாயிரும்

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்
- கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாகக் கேட்டருளும்
- கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாகக் கேட்டருளும்

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா
- எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா
- எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி

தூய ஆவியாராகிய சர்வேசுரா
- எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி

தம திருத்துவமாகிய ஏக சர்வேசுரா
- எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி

புனித மரியே
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

சர்வேசுரனுடைய புனித மாதாவே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

கன்னியாஸ்திரீகளின் உத்தம கன்னிகையே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

கிறிஸ்துவினுடைய மாதாவே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

திருச்சபையின் மாதாவே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

தேவ வரப்பிரசாதத்தின் மாதாவே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

மகா பரிசுத்த மாதாவே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

அத்தியந்த விரத்தியாயிருக்கிற மாதாவே..
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

பழுதற்ற கன்னிகையாயிருக்கிற மாதாவே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

கன்னி சுத்தங்கெடாத மாதாவே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

மகா அன்புக்குப் பாத்திரமாயிருக்கற மாதாவே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

ஆச்சரியத்துக்கு உரிய மாதாவே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

நல்ல ஆலோசனை மாதாவே,,,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

சிருஷ்டிகருடைய மாதாவே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

இரட்சகருடைய மாதாவே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

மகா புத்தி உடைத்தான கன்னிகையே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

மகா வணக்கத்துக்கு உரிய கன்னிகையே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

பிரகாசமாய் ஸ்துதிக்கப்பட யோக்கியமாயிருக்கிற கன்னிகையே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

சக்தி உடைத்தவளாயிருக்கிற கன்னிகையே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

தயையுள்ள கன்னிகையே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

விசுவாசியாயிருக்கிற கன்னிகையே....
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

தருமத்தின் கண்ணாடியே…
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

ஞானத்துக்கு இருப்பிடமே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

எங்கள் சந்தோசத்தின் காரணமே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

ஞானப் பாத்திரமே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

மகிமைக்குரிய பாத்திரமே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

அத்தியந்த பக்தியுடைத்தான பாத்திரமே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

மறை பொருளை கொண்ட ரோஜா மலரே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

தாவீது இராஜாவுடைய உப்பரிகையே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

தந்த மயமாயிருக்கிற உப்பரிகையே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

சொர்ண மயமாயிருக்கிற ஆலயமே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

வாக்குத்தத்தத்தின் பெட்டகமே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

பரலோகத்தினுடைய வாசலே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

விடியற்க்காலத்தின் நட்சத்திரமே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

வியாதிக்காரருக்கு ஆரோக்கியமே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

பாவிகளுக்கு அடைக்கலமே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

கஸ்திப்படுகிறவர்களுக்கு தேற்றரவே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

கிறிஸ்தவர்களுடைய சகாயமே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

சம்மனசுக்களுடைய இராக்கினியே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

பிதாப் பிதாக்களுடைய இராக்கினியே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

இறைவாக்கினர்களுடைய இராக்கினியே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

அப்போஸ்தலர்களுடைய இராக்கினியே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

மறைசாட்சிகளுடைய இராக்கினியே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

ஸ்துதியர்களுடைய இராக்கினியே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

கன்னியர்களுடைய இராக்கினியே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

அனைத்துப் புனிதர்களுடைய இராக்கினியே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

ஜென்ம பாவமின்றி உற்பவித்த இராக்கினியே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

பரலோகத்துக்கு ஆரோபணமான இராக்கினியே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

திருச் செபமாலையின் இராக்கினியே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

சமாதானத்தின் இராக்கினியே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே- எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் சுவாமி

உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே
- எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி

உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே
- எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி

- இயேசு கிறிஸ்து நாதருடைய திரு வாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாய் இருக்கத்தக்கதாக

- சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே ! இதோ உம்முடைய சரணமாக ஓடிவந்தோம். எங்கள் அவசரங்களிலே நாங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்குப் பாராமுகமாய் இராதேயும். ஆசீர்வதிக்கப்பட்டவளுமாய் மோட்சமுடையவளுமாயிருக்கிற நித்திய கன்னிகையே ! சகல ஆபத்துக்களிலேயும் நின்று எங்களைத் தற்காத்துக் கொள்ளும்.. இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்கள் ஆகும்படி, சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

செபிப்போமாக :

இறைவா! முழுமனதோடே தெண்டனாக விழுந்துகிடக்கிற இந்த குடும்பத்தைப் பார்த்து எப்பொழுதும் பரிசுத்த கன்னியான மரியாளுடைய வேண்டுதலினாலே, சகல சத்துருக்களின் சற்பனையிலே நின்று பிரசன்னராய்த் தயை செய்து இரட்சியும். இந்த மன்றாட்டுக்களை எல்லாம் எங்கள் ஆண்டவரான இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். –ஆமென்

தந்தை! மகன்! தூய ஆவியாரின்! பெயராலே
- ஆமென்.

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு