அம்மா என் அம்மா நீ தானம்மா Amma En Amma Neethan Amma
அம்மா என் அம்மா நீ தானம்மா
பிள்ளை உன் பிள்ளை நான் தானம்மா
ஆரோக்கியம் தருகின்ற தாய் நீ அம்மா
அடைக்கலம் தருகின்ற தாய் நீ அம்மா
1.அருளின் ஒளியை தந்தீரே
ஆசையாய் அன்பை பொழிந்தீரே
இதயத்தில் என்னை நினைத்தீரே
இதயம் மகிழ வாழ்ந்திடுவேன்
அம்மா என்று அழைக்கும் போது
மகளே என்று ஓடிவந்து
கலங்கிய என்னை கரம் பிடித்தாய் (2)
2.உறவில் நாளும் வளர்ந்திடவே
ஊக்கம் என்னில் தந்தீரே
உந்தன் உள்ளம் நினைப்பது போல்
நான் உலகில் நாளும் வாழ்ந்திடுவேன்
அம்மா என்று அழைக்கும் போது
மகளே என்று ஓடிவந்து
கலங்கிய என்னைக் கரம் பிடித்தாய் (2)
Comments