வற்றாத வரங்களின் ஊற்றே அம்மா
முஞ்சிறை ஊர் வாழும் அம்மா
எம் குறை தீர்ப்பாயே அம்மா
வற்றாத வரங்களின் ஊற்றே அம்மா (2)
நலம் தரும் ஆரோக்கிய தாயே அம்மா
துன்பங்கள் மலை போல வந்தாலும் அம்மா உன்
அன்புக்கரம் கொண்டு அணைப்பாயே
துயரங்கள் அலைபோல எழுந்தாலும் (2)
பாசத்தால் ஆதரித்துக் காப்பாயே -அம்மா அம்மா
நலமற்று யாம் வாடும் போதெல்லாம் அம்மா உன்
நம்பிக்கை தந்தென்மை நடத்திட்டாய்
நலிவுற்று நடை சோர்ந்து போனாலும் -2
உடல் உள்ளம் நலம் தந்து உடனிருப்பாய் -அம்மா அம்மா
Comments