கிறிஸ்துவின் ஒளி இதோ - இறைவனுக்கு நன்றி கிறிஸ்துவின் ஒளி இதோ - இறைவனுக்கு நன்றி கிறிஸ்துவின் ஒளி இதோ - இறைவனுக்கு நன்றி வானகத் தூதர் அணி மகிழ்வதாக இத்திருச்சடங்கிலே பெருமகிழ்ச்சி பொங்குவதாக மாண்புமிக்க மன்னரது வெற்றிக்காக எக்காளம் தொனித்து மீட்பை அறிவிப்பதாக. இப்பெருஞ் சுடர்களால் ஒளிவீசப் பெற்று இவ்வுலகும் பெருமகிழ்ச்சி கொள்வதாக முடிவில்லா மன்னரது பேரொளியால் உலகெல்லாம் துலங்கி, தன்னைச் சூழ்ந்த இருளனைத்தும் ஒழிந்ததென்று உணர்வதாக. திருவிளக்கின் பெருஞ்சுடரால் அழகுபெற்று அன்னையாம் திருச்சபையும் களிகூர்வதாக. இறைமக்கள் அனைவரது பேரொலியால் இக்கோயில் எதிரொலித்து முழங்குவதாக. (எனவே, இத்திருவிளக்கின் வியத்தகு ஒளியைச் சூழ்ந்துநிற்கும் அன்புமிக்க சகோதர சகோதரிகளே, உங்களை வேண்டுகிறேன்: என்னுடன் சேர்ந்து, எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுவீரே. தகுதியற்ற அடியேனைத் திருப்பணியாளருள் (திருத்தொண்டருள்) சேர்த்திடத் தயைகூர்ந்த இறைவன்தாமே திருவிளக்கின் பேரொளியை என்மீது வீசி இத்திரியின் புகழ்சாற்றச் செய்வாராக). முன்மொழி: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக. பதில்: உம்மோடும் இருப்பாராக. முன். இதயங்களை ஆண்டவரி...