பலத்தினாலும்‌ அல்ல பராக்கிரமத்தாலும்‌ அல்ல / balathinalum alla barakiramathinalum alla

பலத்தினாலும்‌ அல்ல பராக்கிரமத்தாலும்‌ அல்ல
உம்‌ ஆவியாலே எல்லாம்‌ ஆகிடும்‌

அன்பரே உந்தன்‌ பாதம்‌ அண்டி நான்‌ வந்துவிட்டேன்‌
உம்‌ ஆவியாலே அபிஷேகியும்‌

1. குறைகளை மறைப்பவன்‌ வாழ்வடையான்‌
அறிக்கையைச்‌ செய்கிறவன்‌ தாழ்வடையான்‌
பரிசுத்தனாகவே நான்‌ வாழ்ந்திடவே
பாவியாம்‌ என்மேல்‌ இரங்கிடுமே -- பலத்தினாலும்‌

2. சுயமாக நான்‌ ஒன்றும்‌ செய்யாமலே
நிதானித்து உந்தன்‌ சித்தம்‌ செய்திடவே
- சமர்ப்பித்து உந்தன்‌ பாதம்‌ அடிபணிந்தேன்‌
ஆவியால்‌ மறுரூபம்‌ ஆகிடுவேன்‌ -- பலத்தினாலும்‌

3. எதிரியாம்‌ பிசாசை நான்‌ வீழ்த்திடவே
நீர்‌ ஜெயித்தது போல ஜெயித்திடவே
வசனத்தில்‌ நிலைத்திடச்‌ செய்திடுமே
உன்னதா! உம்மோடென்னை இணைத்திடுமே -- பலத்தினாலும்

4. விருதினைப்‌ பெற்றுக்கொள்ள உதவிடுமே
விருதாவாய்‌ ஓடிடாமல்‌ காத்திடுமே
ன்னானவைகளை நான்‌ மறந்திடுவேன்‌
"உம்மை நான்‌ அடைந்திட தொடர்ந்திடுவேன்‌ -- பலத்தினாலும்‌

5. என்று நீர்‌ வருவீரோ என்‌ இயேசுவே
ஏங்குதென்‌ உள்ளம்‌ உம்மோடிணைந்திடவே
நேசத்தின்‌ அனல்‌ என்னில்‌ எரிந்திடுதே
நேசரை என்றென்றுமாய்‌ மணந்திடவே -- பலத்தினாலும்‌

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு