Posts

Showing posts from March, 2023

புனித அல்போன்சா| Saint Alphonsa

Image
புனித அல்போன்சா பிறப்பு - 19 ஆகஸ்ட் 1910 இறப்பு - 28 ஜூலை 1946 அருளாளர் பட்டம் - 8 பிப்ரவரி 1986 புனிதர் பட்டம் - 12 அக்டோபர் 2008 திருவிழா- 28 ஜூலை இந்தியாவின் முதல் பெண் புனிதர். புகைப்படங்கள்:

புனித வியாகுல மாதா ஆலயம்

Image
புனித வியாகுல மாதா ஆலயம் visit in Youtube இடம்- வெள்ளிக்கோடு மாவட்டம் - கன்னியாகுமரி மறைமாவட்டம்- குழித்துறை மறைவட்டம்- முளகுமூடு நிலை: பங்குதளம் கிளைப்பங்கு- தூய சூசையப்பர் ஆலயம், சூசைபுரம் குடும்பங்கள்- 650 அன்பியங்கள்- 19 ஞாயிறு திருப்பலி- காலை 6:00 மணிக்கு திருவிழா- செப்டம்பர் மாதம் புகைப்படங்கள்-

கடவுளை நாம் எவ்வாறு அடையலாம்

கடவுளை அறிந்து, அவரை அன்ப செய்து, அவருடைய பிள்ளைகளாகிய எல்லா மனிதரையும் அன்பு செய்து வாழ்ந்தால் நாம் கடவுளை அடையலாம்.

மனித வாழ்க்கையும் கடவுளும்

மனிதர் இவ்வுலகில் மகிழ்ச்சியாக வாழ விரும்புகின்றனர். உண்மையான மகிழ்ச்சியைத் தருபவரும், அதற்கு ஊற்றாக இருப்பவரும் கடவுளே. எனவே கடவுளை அடைவதில்தான் மனிதர் உண்மையான மகிழ்ச்சியைப் பெற முடியும்.

இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை

இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை, பொறுமையுடன் கேட்டுப் பாருங்கள் அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை, இறைவனிடம் கை ஏந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை, இல்லையென்று சொல்லும் மனம் இல்லாதவன், ஈடுயிணை இல்லாதக் கருணையுள்ளவன், இன்னல் பட்டு எழும் குரலை கேட்கின்றவன், எண்ணங்களை இதயங்களை பார்க்கின்றவன், இறைவனிடம் கை ஏந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவது இல்லை, ஆசையுடன் கேட்பவற்கு அள்ளி தருபவன், அல்லல் துன்பம் துயரங்களை கிள்ளியெறிபவன், பாசத்தோடு யாவரையும் பார்க்கின்றவன், பாவங்களை பார்வையினால் மாய்க்கின்றவன், அல்லல் படும் மாந்தர்களே அயராதீர்கள், அல்லாஹ்வின் பேரருளை நம்பி நில்லுங்கள், அவனிடத்தில் குறை அனைத்தும் சொல்லிக் காட்டுங்கள், அன்பு நோக்க தருக என்று அழுது கேளுங்கள், இறைவனிடம் கை ஏந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவது இல்லை, தேடும் நேயர் நெஞ்சங்களில் குடியிருப்பவன், தேடாத மனிதருக்கும் உணவளிப்பவன், வாடும் இதயம் மலர்வதற்கு வழி வகுப்பவன், வாஞ்சையோடு யாவருக்கும் துணை நிற்பவன், அலை முழங்கும் கடல் படைத்து அழகு பார்ப்பவன், அலையின் மீதும் மலையின் மீதும் ஆட்சி செய்பவன், தலை வணங்...

நம்புங்கள் ஜெபியுங்கள் நல்லது நடக்கும், Nambungal Jebiungal nalathu nadakum

Image
நம்புங்கள் ஜெபியுங்கள் நல்லது நடக்கும் துன்பங்களோ துயரங்களோ சோதனையோ வேதனையோ(2) பதுவைப் புனிதர் பரிந்துரைப்பார் எல்லாம் வல்லவர் நடத்தி வைப்பார்(2) மனச்சுமையோ பாரங்களோ உடற்பிணியோ ஊனங்களோ(2) பதுவைப் புனிதர் பரிந்துரப்பார் எல்லாம் வல்லவர் நலம் தருவார்(2) வறியவரோ சிறியவரோ முதியோரோ இளையோரோ(2) பதுவைப் புனிதர் பரிந்துரப்பார் எல்லாம் வல்லவர் அணைத்துக் கொள்வார்(2)

ஆறுதலின் தெய்வமே உம்முடைய திருச்சமூகம் எவ்வளவு இன்பமானது, Aruthalin deivamey ummudaiya thiru samookam

Image
ஆறுதலின் தெய்வமே உம்முடைய திருச்சமூகம் எவ்வளவு இன்பமானது 1. ஆத்துமா தேவனே உம்மையே நோக்கி ஆர்வமுடன் கதறுகின்றது உள்ளமும் உடலும் ஒவ்வொரு நாளும் கெம்பீரித்து சத்தமிடுது – ஆமென் 2. உம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர் உண்மையிலே பாக்கியவான்கள் தூய மனதுடன் துதிப்பார்கள் துதித்துக் கொண்டிருப்பார்கள் – ஆமென் 3. உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம் உண்மையிலே பாக்கியவான்கள் ஓடினாலும் களைப்படையார் நடந்தாலும் சோர்வடையார் – ஆமென் 4. கண்ணீரின் பாதையில் நடக்கும்போதெல்லாம் களிப்பான நீருற்றாய் மாற்றிக்கொள்வார்கள் வல்லமை மேலே வல்லமை கொண்டு சீயோனைக் காண்பார்கள் – ஆமென் 5. வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதைவிட உம்மிடத்தில் ஒரு நாள் மேலானது ஒவ்வொரு நாளும் உமது இல்லத்தின் வாசலில் காத்திருப்பேன் – ஆமென்

வெற்றிக்கொடி பிடித்திடுவோம் நாம்வீர நடை நடந்திடுவோம், Vetri kodi pidithithuduvom

Image
வெற்றிக்கொடி பிடித்திடுவோம் நாம் வீரநடை நடந்திடுவோம் வெள்ளம் போல சாத்தான் வந்தாலும் ஆவி தாமே கொடி பிடிப்பார் அஞ்சாதே என் மகனே நீ அஞ்சாதே என் மகளே ஆயிரம் தான் துன்பம் வந்தாலும் அணுகாது அணுகாது ஆவியின் பட்டயம் உண்டு நாம் அலகையை வென்று விட்டோம் காடானாலும் மேடானாலும் கர்த்தருக்கு பின் நடப்போம் கலப்பையில் கை வைத்திட்டோம் நாம் திரும்பி பார்க்க மாட்டோம் கோலியாத்தை முறியடிப்போம் இயேசுவின் நாமத்தினால் விசுவாச கேடயத்தினால் பிசாசை வென்றிடுவோம்

தெய்வமே இயேசுவே உம்மைத் தேடுகிறேன் தினம் தினம் உம்மையே நோக்கிப் பார்க்கிறேன்|| Deivamey Yesuvey ummai thedukiren

Image
தெய்வமே இயேசுவே உம்மைத் தேடுகிறேன் தினம் தினம் உம்மையே நோக்கிப் பார்க்கிறேன் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – 2 1. உலகப் பெருமை இன்பமெல்லாம் உமக்காய் இழந்தேனையா உம்மைப் பிரிக்கும் பாவங்களை இனிமேல் வெறுத்தேனையா உம் சித்தம் நிறைவேற்றுவேன் உமக்காய் வாழ்ந்திடுவேன் 2. எதை நான் பேசவேண்டுமென்று கற்றுத் தாருமையா எவ்வழி நடக்க வேண்டுமென்று பாதை காட்டுமையா ஒளியான தீபமே வழிகாட்டும் தெய்வமே 3. உலகம் வெறுத்து பேசட்டுமே உம்மில் மகிழ்ந்திருப்பேன் காரணமின்றி பகைக்கட்டுமே கர்த்தரைத் துதித்திடுவேன் சிலுவை சுமந்தவரை சிந்தையில் நிறுத்துகிறேன்

தாவீதைப் போல நடனமாடி அப்பாவை ஸ்தோத்தரிப்பேன், Thavithai Pola Nadanamadi

Image
தாவீதைப் போல நடனமாடி அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் இயேசப்பா ஸ்தோத்திரம் – 4 1. என்ன வந்தாலும் எது நடந்தாலும் அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் – இயேசப்பா 2. கைத்தாளத்தோடும் மத்தாளத்தோடும் அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் 3. பரிசுத்த இரத்தத்தால் பாவங்கள் கழுவிய அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் 4. ஆவியினாலே அபிஷேகம் செய்த அப்பாவை ஸ்தோத்தாப்பேன் 5. கிறிஸ்துவுக்குள்ளாய் முன் குறித்தாரே அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்

கலங்காதே கலங்காதே கர்த்தர் உன்னை கைவிடமாட்டார், Kalangaathae Kalangaathae Karththar Unnai Kaividamaattar

Image
கலங்காதே கலங்காதே கர்த்தர் உன்னை கைவிடமாட்டார் 1. முள்முடி உனக்காக இரத்தமெல்லாம் உனக்காக பாவங்களை அறிக்கையிடு பரிசுத்தமாகிவிடு – நீ 2. கல்வாரி மலைமேலே காயப்பட்ட இயேசுவைப் பார் கரம் விரித்து அழைக்கின்றார் கண்ணீரோடு ஓடி வா – நீ 3. காலமெல்லாம் உடனிருந்து கரம்பிடித்து நடத்திச் செல்வார் கண்ணீரெல்லாம் துடைப்பார் கண்மணி போல் காத்திடுவார் – உன்னை 4. உலகத்தின் வெளிச்சம் நீ எழுந்து ஒளி வீசு மலைமேல் உள்ள பட்டணம் – தம்பி (நீ) மறைவாக இருக்காதே 5. உன் நோய்கள் சுமந்து கொண்டார் உன் பிணிகள் ஏற்றுக்கொண்டார் நீ சுமக்கத் தேவையில்லை விசுவாசி அது போதும் 6. உலகம் உன்னை வெறுத்திடலாம் உற்றார் உன்னைத் துரத்திடலாம் உன்னை அழைத்தவரோ உள்ளங்கையில் ஏந்திடுவார்

கர்த்தரை நம்பிடுங்கள் அவர் கைவிடவேமாட்டார் | Kartharai Nambidungal Avar Kaividamatar

Image
கர்த்தரை நம்பிடுங்கள் அவர் கைவிடவேமாட்டார் 1. உயிர்வாழ எதை உண்போம் உடல் மூட எதை உடுப்போம் என்றே கலலைப்படல் வேண்டாம் உணவை விட உயிரும் உடையைவிட உடலும் உயிர்ந்ததை அல்லவா வானத்துப் பறவையைப் பாருங்கள் அவை விதைப்பதுமில்லை அறுப்பதுமில்லை சேர்த்து வைப்பதில்லை கர்த்தர் காக்கின்றார் 2. கவலைப்படுவதினால் எவன் தன் வளர்த்தியிலே ஒரு முழம் கூட்ட முடியும் எதை உடுப்போம் என்று கவலையே வேண்டாம் சொல்வதைக் கேளுங்கள் வயல்வெளி மலர்களைப் பாருங்கள் அவை உழைப்பதுமில்லை நூற்பதுமில்லை கர்த்தர் உடுத்துகின்றார்

என் இயேசு ராஜாவுக்கே எந்நாளும் ஸ்தோத்திரம் என்னோடு வாழ்பவர்க்கே, Yen Rajavuikey Yennalum Sothiram

Image
என் இயேசு ராஜாவுக்கே எந்நாளும் ஸ்தோத்திரம் என்னோடு வாழ்பவர்க்கே எந்நாளும் ஸ்தோத்திரம் கர்த்தாவே நீர் செய்த நன்மைகளை நித்தமும் நினைக்கிறேன் முழு உள்ளத்தோடு உம் நாமம் பாடிப் புகழுவேன் - நான் நெருக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன் நேசர் நீர் அணைத்தீரே கைவிடப்பட்டு கதறினேன் கர்த்தர் நீர் தேற்றினீர் இனி நான் வாழ்வது உமக்காக உமது மகிமைக்காக உம் அன்பை எடுத்துச் சொல்லுவேன் ஓயாமல் பாடுவேன் - நான் பாவங்கள் அணைத்தும் மன்னித்தீரே நோய்களை சுகமாக்கினீர் எனது ஜீவனை அழிவில் நின்று காத்து இரட்சித்தீரே

உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா இயேசையா இயேசையா, Ummai Pitithu Vazla Mudiyathaiya

Image
உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா இயேசையா இயேசையா (2) 1. திராட்சை செடியின் கொடியாக உம்மில் நிலைத்திருப்பேன் மிகுந்த கனி கொடுப்பேன் உம் சீடானாயிருப்பேன் – நான் 2. முன்னும் பின்னும் என்னை நெருக்கி உம் கரம் வைக்கின்றீர் உமக்கு மறைவாய் எங்கே போவேன் உம்மைவிட்டு எங்கே ஓடுவேன் – நான் 3. பகைவர்கள் ஆயிரம் பேசட்டுமே பயந்து போக மாட்டேன் துன்பங்கள் ஆயிரம் சூழ்ந்தாலும் சோர்ந்து போகமாட்டேன் – நான் 4. நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னை சூழ்ந்து உள்ளீர் என் வழிகளெல்லாம் நீர் அறிவீர் எல்லாம் உம் கிருபை – ஐயா

இயேசு கூட வருவார் எல்லாவித அற்புதம் செய்வார், Yesu Kooda varuvar Yella vidha Arputham Seivar

Image
இயேசு கூட வருவார் எல்லாவித அற்புதம் செய்வார் தந்தான தந்தனத்தானானா – 2 1. நோய்கள் பேய்கள் ஓட்டிடுவார் நொந்துபோன உள்ளத்தை தேற்றிடுவார் 2. வேதனை துன்பம் நீக்கிடுவார் சமாதானம் சந்தோஷம் எனக்குத் தருவார் 3. கடன்தொல்லை கஷ்டங்கள் நீக்கிடுவார் கண்ணீர்கள் அனைத்தையும் துடைத்திடுவார் 4. எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவேன் எதிரியான சாத்தானை முறியடிப்பேன்

ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன் | Aarathipen Nan Aarathipen Andavar

Image
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன் 1. வல்லவரே உம்மை ஆராதிப்பேன் நல்லவரே உம்மை ஆராதிப்பேன் 2. பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்பேன் பணிந்து குனிந்து ஆராதிப்பேன் 3. ஆவியிலே உம்மை ஆராதிப்பேன் உண்மையிலே உம்மை ஆராதிப்பேன் 4. தூதர்களோடு ஆராதிப்பேன் ஸ்தோத்திர பலியோடு ஆராதிப்பேன் 5. காண்பவரை நான் ஆராதிப்பேன் காப்பவரை நான் ஆராதிப்பேன் 6. வெண்ணாடை அணிந்து ஆராதிப்பேன் குருத்தோலை ஏந்தி ஆராதிப்பேன்

ஒரு தாய் தேற்றுவது போல் என் நேசர் தேற்றுவார் | oru thaai thertuvathu pol

Image
ஒரு தாய் தேற்றுவது போல் என் நேசர் தேற்றுவார் அல்லேலூயா - 4 மார்போடு அணைப்பாரே மனக்கவலை தீர்ப்பரே கரம் பிடித்து நடத்துவார் கன்மலைமேல் நிறுத்த்வார் எனக்காக மரித்தாரே என்பாவம் சுமந்தாரே ஒருபோதும் கைவிடார் ஒருநாளும் விலகிடார்

இயேசுவே என் தெய்வமே என் மேல் மனமிரங்கும்| Yesuvey Yen Deivamey Yenmel Manam Irangaum

Image
இயேசுவே என் தெய்வமே என் மேல் மனமிரங்கும் நான் பாவம் செய்தேன் உம்மை நோகச் செய்தேன் உம்மைத் தேடாமல் வாழ்ந்து வந்தேன் என்னை மன்னியும் தெய்வமே 1. உம்மை மறுதலித்தேன் பின்வாங்கிப் போனேன் உம் வல்லமை இழந்தேனய்யா என்னை மன்னியும் தெய்வமே 2. முள்முடி தாங்கி அய்யா காயப்பட்டீர் நீர் எனக்காகப் பலியானீர் உம் இரத்தத்தால் கழுவிவிடும் 3. துன்ப வேளையிலே மனம் துவண்டு போனேன் உம்மை நினையாது தூரப் போனேன் என்னை மன்னியும் தெய்வமே 4. அநியாயம் செய்தேன் கடும் கோபம் கொண்டேன் பிறர் வாழ்வைக் கெடுத்தேனய்யா என்னை மன்னியும் தெய்வமே

இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ மறந்திடுவாயோ மனிதப் பண்பிருந்தால். Yesuvin Anbai marathidu vaiyoo

Image
இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ மறந்திடுவாயோ மனிதப் பண்பிருந்தால் 1. மறந்திடாதிருக்க நீ சிலுவையிலே அவர் மரித்து தொங்கிடும் காட்சி மனதில் நில்லாதோ 2. அளவில்லா அன்பு அதிசய அன்பு ஆழமகல நீளம் எல்லை காணா அன்பு களங்கமில்லா அன்பு கருணை சேர் அன்பு கல்வாரிமலைக் கண்ணீர் சொல்லிடுமன்பு 3. அலைகடலைவிடப் பரந்த அன்பு அன்னைமார் அன்பெல்லாம் திரையிடுமன்பு மலைபோல் எழுந்தென்னை வளைத்திடுமன்பு சிலையெனப் பிரமையில் நிறுத்திடுமன்பு 4. எனக்காக மனவுரு தரித்த நல்லன்பு எனக்காக தன்னையே உணவாக்கும் அன்பு எனக்காகப் பாடுகள் ஏற்ற பேரன்பு எனக்காக உயிரையே தந்த பேரன்பு 5. கலைக்கடங்கா அன்பு கதிதரும் அன்பு கைதிபோல் இயேசுவைச் சிறையிடும் அன்பு விலையிலலாப் பலியாக விளங்கிடுமன்பு விவரிக்க விவரிக்க வளர்ந்திடும் அன்பு

என்னை நேசிக்கின்றாயா -கல்வாரிக் காட்சியைக் கண்ட பின்னும் நேசியாமல் இருப்பாயா. Yennai Nesikintaaya

Image
என்னை நேசிக்கின்றாயா - 2 கல்வாரிக் காட்சியைக் கண்ட பின்னும் நேசியாமல் இருப்பாயா (2) 1. பாவத்தின் அகோரத்தைப் பார் பாதகத்தின் முடிவினைப் பார் - 2 பரிகாசச் சின்னமாய் சிலுவையிலே பலியானேன் பாவி உனக்காய் (2) - என்னை... 2. பாவம் பாரா பரிசுத்தர் நான் பாவி உன்னை அழைக்கின்றேன் வா (2) உன் பாவம் யாவும் சுமப்பேன் நான் பாதம் தன்னில் இளைப்பாறவா (2) - என்னை... 3. வானம் பூமி படைத்திருந்தும் வாடினேன் உன்னை இழந்ததினால் (2) தேடி மீட்டிட பிதா அனுப்பியதால் ஓடி வந்தேன் மானிடனாய் (2) - என்னை... 4. உம்மை நேசிக்கின்றேன் நான் - 2 கல்வாரிக் காட்சியைக் கண்ட பின்னும் நேசியாமல் இருப்பேனோ