இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை

இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை,
பொறுமையுடன் கேட்டுப் பாருங்கள் அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை,
இறைவனிடம் கை ஏந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை,

இல்லையென்று சொல்லும் மனம் இல்லாதவன்,
ஈடுயிணை இல்லாதக் கருணையுள்ளவன்,
இன்னல் பட்டு எழும் குரலை கேட்கின்றவன்,
எண்ணங்களை இதயங்களை பார்க்கின்றவன்,

இறைவனிடம் கை ஏந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவது இல்லை,

ஆசையுடன் கேட்பவற்கு அள்ளி தருபவன்,
அல்லல் துன்பம் துயரங்களை கிள்ளியெறிபவன்,
பாசத்தோடு யாவரையும் பார்க்கின்றவன்,
பாவங்களை பார்வையினால் மாய்க்கின்றவன்,
அல்லல் படும் மாந்தர்களே அயராதீர்கள்,
அல்லாஹ்வின் பேரருளை நம்பி நில்லுங்கள்,
அவனிடத்தில் குறை அனைத்தும் சொல்லிக் காட்டுங்கள்,
அன்பு நோக்க தருக என்று அழுது கேளுங்கள்,

இறைவனிடம் கை ஏந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவது இல்லை,

தேடும் நேயர் நெஞ்சங்களில் குடியிருப்பவன்,
தேடாத மனிதருக்கும் உணவளிப்பவன்,
வாடும் இதயம் மலர்வதற்கு வழி வகுப்பவன்,
வாஞ்சையோடு யாவருக்கும் துணை நிற்பவன்,

அலை முழங்கும் கடல் படைத்து அழகு பார்ப்பவன்,
அலையின் மீதும் மலையின் மீதும் ஆட்சி செய்பவன்,
தலை வணங்கி கேட்பவற்கு தந்து மகிழ்பவன்,
தரணி எங்கும் நிலைத்து நிற்கும் மகா வல்லவன்,

இறைவனிடம் கை ஏந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை,
பொருமையோடு கேட்டு பாருங்கள் அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை.

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு