இயேசுவே என் தெய்வமே என் மேல் மனமிரங்கும்| Yesuvey Yen Deivamey Yenmel Manam Irangaum
இயேசுவே என் தெய்வமே என் மேல் மனமிரங்கும்
நான் பாவம் செய்தேன் உம்மை நோகச் செய்தேன்
உம்மைத் தேடாமல் வாழ்ந்து வந்தேன்
என்னை மன்னியும் தெய்வமே
1. உம்மை மறுதலித்தேன் பின்வாங்கிப் போனேன்
உம் வல்லமை இழந்தேனய்யா
என்னை மன்னியும் தெய்வமே
2. முள்முடி தாங்கி அய்யா காயப்பட்டீர்
நீர் எனக்காகப் பலியானீர்
உம் இரத்தத்தால் கழுவிவிடும்
3. துன்ப வேளையிலே மனம் துவண்டு போனேன்
உம்மை நினையாது தூரப் போனேன்
என்னை மன்னியும் தெய்வமே
4. அநியாயம் செய்தேன் கடும் கோபம் கொண்டேன்
பிறர் வாழ்வைக் கெடுத்தேனய்யா
என்னை மன்னியும் தெய்வமே
Comments