இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ மறந்திடுவாயோ மனிதப் பண்பிருந்தால். Yesuvin Anbai marathidu vaiyoo

இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ
மறந்திடுவாயோ மனிதப் பண்பிருந்தால்

1. மறந்திடாதிருக்க நீ சிலுவையிலே அவர்
மரித்து தொங்கிடும் காட்சி மனதில் நில்லாதோ

2. அளவில்லா அன்பு அதிசய அன்பு
ஆழமகல நீளம் எல்லை காணா அன்பு
களங்கமில்லா அன்பு கருணை சேர் அன்பு
கல்வாரிமலைக் கண்ணீர் சொல்லிடுமன்பு

3. அலைகடலைவிடப் பரந்த அன்பு
அன்னைமார் அன்பெல்லாம் திரையிடுமன்பு
மலைபோல் எழுந்தென்னை வளைத்திடுமன்பு
சிலையெனப் பிரமையில் நிறுத்திடுமன்பு

4. எனக்காக மனவுரு தரித்த நல்லன்பு
எனக்காக தன்னையே உணவாக்கும் அன்பு
எனக்காகப் பாடுகள் ஏற்ற பேரன்பு
எனக்காக உயிரையே தந்த பேரன்பு

5. கலைக்கடங்கா அன்பு கதிதரும் அன்பு
கைதிபோல் இயேசுவைச் சிறையிடும் அன்பு
விலையிலலாப் பலியாக விளங்கிடுமன்பு
விவரிக்க விவரிக்க வளர்ந்திடும் அன்பு

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு