இன்றைய மன்னா
*மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி, சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள்.*
*எபேசியர் 4 : 2-3*
✅ மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.
பலியை அல்ல இரக்கத்தையும், தகனபலிகளைப் பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும், விரும்புங்கள்.
தேவனுடைய அன்பிலே உங்களை காத்துக்கொண்டு, நித்திய ஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தை பெறக் காத்திருங்கள்.
நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள், உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள், ஜெபத்திலே உறுதியாய்த்தரித்திருங்கள்,
உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள், நான் உலகத்தை ஜெயித்தேன். என்றார் தேவன்,
கிறிஸ்தவ வாழ்க்கை என்பது ஒரு புனிதமான வாழ்க்கையாகும், அன்பு நிறைந்த ஸ்நேகத்தின் வாழ்க்கையாகும், யாவரையும் அரவணைத்து போகும் வாழ்க்கையாகும், ஆனால் இவைகள் யாவும் இலவசமாய் கிடைக்ககூடியதல்ல, மாறாக பாடுகளும் உபத்திரமும் போராட்டங்களிலும் வெற்றிபெற்றால் மட்டுமே கிடைக்கக்கூடிய ஒன்றாகும், நம்பிக்கையோடு போராடுகிறவர்கள் முன்னேறி செல்கிறார்கள், நம்பிக்கையை இழந்தவர்களோ தோற்று போகிறார்கள்,
கர்த்தர் நமக்கு துணையாய் இருக்கையில் நாம் அவரை பின்பற்றுவோமாகில் ஜெயம் நமக்கு நிச்சயம், மாறாக நீங்களே முயற்ச்சி செய்விர்களாகில் தோற்றுப்போவது உறுதி, கர்த்தராலன்றி உங்களால் ஒன்றும் செய்ய முடியாது, ஆதலால் இந்த உலகத்தில் நாம் சுகித்திருக்கவும் நிலைத்திருக்கவும் கர்த்தரின் உத்தாசை நமக்கு தேவை,
முக்கியமாக கிறிஸ்தவர்களுக்கு கர்த்தரின் அருளும் உதவியும் பாதுகாப்பும் மிக மிக அவசியமானதொன்று,
அநேகர் இந்த பூமிலே வேதனையோடு ஜீவிக்கிறதை பார்க்கிறோம். காரணம் அவர்கள் கர்த்தரோடு நடக்கிறதில்லை, கர்த்தரை தேடுவது்மில்லை,
தேவனை சார்ந்திருக்கிற நாமோ திடன் கொள்வோம், கர்த்தர் தாமே நம்மை தேற்றுவார்.
*கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக* ஆமென்
*சகோ. ஜான் மார்ட்டின்*
Comments