இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு
மிகவும் இரக்கமுள்ள தாயே உம்மிடம் அடைக்கலம் நாடி வந்து ஆதரவைத் தேடி மன்றாடினோர் எவரையும் நீர் கைவிட்டதாக ஒருபோதும் உலகில் சொல்லக் கேட்டதில்லை என்பதை நினைத்தருளும். கன்னியர்களுக்கு அரசியான கன்னியே நீர் அடைக்கலம் தருபவர் என்னும் நம்பிக்கை என்னைத் தூண்டுவதால் நான் உமது திருவடியை நாடி வருகிறேன். பாவியாகிய நான் உமது இரக்கத்திற்காக துயரத்தோடு உம் திருமுன் காத்து நிற்கிறேன். மனிதராகப் பிறந்த வார்த்தையின் தாயே என் மன்றாட்டைப் புறக்கணியாமல் கேட்டருளும்.
பிறப்புநிலைப் பாவம் இன்றிக் கருவுற்ற தூய மரியே பாவிகளுக்கு அடைக்கலமே இதோ உம்முடைய அடைக்கலம் நாடி ஓடி வந்தோம். உம்முடைய திருமகனிடம் வேண்டிக்கொள்ளும். ஆமென்
Comments